மூன்று மாதத்தில் 7 கேப்டன்கள்.. இலங்கைக்கு என்னாச்சு??

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil
மூன்று மாதத்தில் 7 கேப்டன்கள்.. இலங்கைக்கு என்னாச்சு??-வீடியோ

கொழும்பு: தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு மூன்று மாதங்களில், ஏழு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்ததாக, பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது.

பாகிஸ்தானுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வென்று அசத்திய இலங்கை அணி, அடுத்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர்

3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர்

அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடரில் இலங்கை விளையாட உள்ளது. வரும் 26, 27ல் நடக்க உள்ள இரண்டு போட்டிகள் அபுதாபியிலும், 29ம் தேதி போட்டி லாகூரிலும் நடக்க உள்ளது.

கேப்டனாக பெரேரா நியமனம்

கேப்டனாக பெரேரா நியமனம்

இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக இருந்த உபுல் தரங்கா, டி-20 போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் கேப்டன் மாற்றம்

மீண்டும் கேப்டன் மாற்றம்

கடந்த மூன்று மாதங்களில் இலங்கை கிரிக்கெட் அணி ஏழு கேப்டன்களை பார்த்துள்ளது. ரங்கனா ஹெராத், தினேஷ் சந்தமால், சமாரா குபுகேதரா, லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கரா ஆகியோர் கேப்டன்களாக இருந்துள்ளனர். தற்போது திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரர்களை இழந்து வருகிறது

வீரர்களை இழந்து வருகிறது

ஏற்கனவே பல முக்கிய வீரர்களை இழந்துள்ள நிலையில், ஒருதினப் போட்டித் தொடருக்கான அணியில் உள்ள 6 பேர் மட்டுமே, டி-20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா வருகிறது இலங்கை

இந்தியா வருகிறது இலங்கை

பாகிஸ்தான் தொடருக்கு அடுத்ததாக, நவம்பரில் இந்தியாவுக்கு வருகிறது இலங்கை அணி. மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srilanka cricket team had 7 captains in 3 months
Please Wait while comments are loading...