மிதாலி ராஜை சச்சினோடு ஒப்பிட கூடாதாம்.. கம்பு சுத்தும் கவாஸ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜை சச்சினுடன் ஒப்பிட முடியாது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தடாலடியாக குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் பெண்கள் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் பிரிஸ்டலில் நடைபெற்ற 23-ஆவது லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் 6000 ரன்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

Sunil Gavaskar says don't compare Mithali Raj with Sachin Tendulkar

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 181 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,028 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த சாதனையை மித்தாலி ராஜ் முறியடித்துள்ளார்.

தொடர்ந்து 7 அரை சதங்களை கடந்தவர் என்றும் 34 வயதான மித்தாலி ராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்படுகிறார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மித்தாலி ராஜின் சாதனை பெருமைப்படக்குரியது. அதை இந்திய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஆனால் அதற்காக அவரை சச்சினுடன் எல்லாம் ஒப்பிட கூடாது என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex cricket player Sunil Gavaskar says that though Mithali Raj breaks world records, we cannot compare with sachin.
Please Wait while comments are loading...