நெதர்லாந்தில் மனைவியுடன் மோடியை சந்தித்த சுரேஷ் ரெய்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆம்ஸ்டர்டாம்: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், அவரது மனைவி பிரியங்காவும், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கிற்காகவும், இந்தியாவின் மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ரெய்னா தேர்வு செய்யப்பட்டவில்லை.

Suresh Raina meets 'man with golden vision' PM Modi in Netherlands

எனவே, மீண்டும் இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதற்கு கடினமாக முயற்சி செய்கிறார். மேலும் அவரது உடற்பயிற்சிக்கு நிறைய நேரம் செலவழிக்கிறார்.

ரெய்னா 223 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5568 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 65 டி20 போட்டிகளில் 1307 ரன்கள் சேர்த்துள்ளார். ரெய்னா முன்னணி வீரர். ஐபிஎல் தொடரில் நிலையான பேட்ஸ்மேன் என பெயர் எடுத்தவர்.

ஐபிஎல் தொடரில் 161 போட்டிகளில் பங்கெடுத்து 4540 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில், நெதர்லாந்து சுற்றுப் பயணத்திற்கு வந்த பிரதமர் மோடியை ஏற்கனவே அங்கு மனைவியோடு சுற்றுலாவுக்கு சென்ற ரெய்னா சந்தித்தார். பொன்னான பார்வை கொண்ட ஒருவரை சந்திப்பதில் மகிழ்ச்சி என மோடியுடனான சந்திப்பு குறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ளார் ரெய்னா.

முன்னதாக, பிரதமர் மோடி வில்லா ஐகெனொர்ஸ்ட்டில் டச்சு ராணி மாசிமா மற்றும் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் சந்தித்து பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior India cricketer Suresh Raina on Tuesday (June 27) met Prime Minister Narendra Modi in the Netherlands.
Please Wait while comments are loading...