டி20 போட்டியில் இரட்டை சதம் விளாசிய ஆப்கன் வீரர்.. புதிய சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்: இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் ஷஃபிகுல்லா ஷஃபாக் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில், அந்நாட்டு வீரர் ஷஃபிகுல்லா ஷஃபாக் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார். 71 பந்துகளில் 21 சிக்சர்கள், 16 பவுண்டரிகள் விளாசி 214 ரன்களை குவித்து அசத்தியுள்ளார் ஷஃபாக்.

 T20 Match: Afghan Batsman Shafiqullah scores 214 off 71 balls

பாரகான் நங்கர்ஹார் சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடரில் இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார். இதன்மூலம், 20 ஓவர்களில் ஷஃபாக் பங்கேற்ற கடீஸ் கிரிக்கெட் அகாடமி அணி 351 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

352 ரன்கள் என்ற அசாத்திய இலக்கை நோக்கி விளாடிய காபூல் ஸ்டார் கிரிக்கெட் அணி 107 ரன்களை மட்டுமே எடுத்து இப்போட்டியில் படுதோல்வி அடைந்தது.

சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில் ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்தனர். ஆனால், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடிக்கவில்லை. அதனை தற்போது ஷஃபாக் முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 35 போட்டிகளில் விளையாடியுள்ள ஷஃபாக், 392 ரன்கள் எடுத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Afghanistan Batsman Shafiqullah Shafaq smashed 214 runs off just 71 balls with the help of 21 sixes and 16 fours against the Kabul Star Cricket Club team in a local T-20 tournament called Paragon Nangarhar Champion Trophy off
Please Wait while comments are loading...