எனது குரு ராகுல் டிராவிட்... இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக மாணவன் நெகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள கோவை மாணவர் 'எனது குரு ராகுல் டிராவிட் தான் ' என்று கூறியுள்ளார்.

கோவையில் நூல் வியாபாரம் செய்து வரும் சுந்தர்ராமன் என்பவரின் மகனான ராதாகிருஷ்ணன், தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். 5 வயதில் இருந்தே கிரிக்கெட் மீது இருந்த தீராத மோகத்தின் காரணமாக தனது திறமையால் இந்திய அணியில் விளையாட தற்போது தேர்வாகியுள்ளார்.

Tamilnadu School student who got selected in U19 cricket team says Rahul Dravid is his guru

கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் பற்றியே யோசித்து வாழும் இவர், உள்ளூர் ஆட்டங்களில் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதாகிருஷ்ணன் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளதால், அவரின் சக மாணவர்கள், மற்றும் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களிடையே உற்சாகம் நிரம்பி வழிகிறது.

விரைவில் இந்திய அணியில் விளையாடி பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்கிறார் ராதாகிருஷ்ணன் என்றார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தன்னுடைய ஆட்டத்தை பாராட்டியதாகவும், தன்னுடைய ஆஸ்தான குரு டிராவிட் தான் எனவும் நெகிழ்ந்து போய் கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Radhakirushnan, a school student from Coimbatore got selected in U19 cricket team. He says Rahul Dravid is his guru.
Please Wait while comments are loading...