For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

21ம் தேதி.. கொல்கத்தாவிலிருந்து டோணி படை கிளம்புகிறது.. ஆசியா கோப்பையை 'அள்ளி' வர!

கொல்கத்தா: ஆசியா கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 21ம் தேதி வங்கதேசம் புறப்பட்டுச் செல்கிறது.

கொல்கத்தாவிலிருந்து இந்திய அணி வங்கதேசம் புறப்பட்டுச் செல்லும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்தில்தான் இலங்கைக்கு எதிரான டுவென்டி 20 தொடரை இந்தியா அட்டகாசமாக வென்றிருந்தது. அதே தெம்புடன் தற்போது வங்கதேசம் புறப்பட்டுச் செல்கிறது.

ஓவர்கள் குறைப்பு

ஓவர்கள் குறைப்பு

ஆசியா கோப்பைக் கிரிக்கெட் போட்டி எப்போதுமே 50 ஓவர் போட்டியாகத்தான் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு போட்டி 20 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிக்கு வசதியாக

உலகக் கோப்பைப் போட்டிக்கு வசதியாக

மார்ச் மாதம் இந்தியாவில் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளதால், அதற்கு வசதியாக இந்தப் போட்டித் தொடரை 20 ஓவர் போட்டியாக ஐசிசி மாற்றி விட்டது.

24ம் தேதி முதல் போட்டி

24ம் தேதி முதல் போட்டி

இந்தியா 24ம் தேதி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தைச் சந்திக்கிறது. அடுத்து 27ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

24 முதல் மார்ச் 6 வரை

24 முதல் மார்ச் 6 வரை

வங்கதேசத்தின் மிர்பூர் மைதானத்தில் 24ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதி வரை ஆசியா கோப்பைப் போட்டிகள் நடைபெறும். இத்தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

நடப்புச் சாம்பியன்

நடப்புச் சாம்பியன்

இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனாக இலங்கை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி ஆசியாக் கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணி விவரம் - டோணி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா, சுரேஷ் ரெய்னா, அஜிங்கியா ரஹானே, ஹர்பஜன் சிங், முகம்மது ஷமி, பவன் நேகி.

Story first published: Friday, February 19, 2016, 13:52 [IST]
Other articles published on Feb 19, 2016
English summary
Mahendra Singh Dhoni-led India will leave for Bangladesh on Sunday (February 21) to participate in the Asia Cup Twenty20 tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X