அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து தெலுங்கானா பெண் சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தெலுங்கானா நால்கொண்டா மாவட்டத்தில் உள்ள அமங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்துஜா ரெட்டி (26). இவர், ஹைதராபாத் மகளிர் கிரிக்கெட் அணிக்காக, மகளிர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

பி.டெக், எம்.பி.ஏ. படித்துள்ள இவர், திருமணத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் குடியேறினார். கல்லூரியிலும் கிரிக்கெட் போட்டிகளில் கலக்கியவர் சிந்துஜா.

அங்கே மீண்டும் கிரிக்கெட் ஆசை துளிர்விட, அமெரிக்காவைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் போராடி, இடம்பிடித்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்துள்ளார்.

விக்கெட் கீப்பர் சிந்துஜா

விக்கெட் கீப்பர் சிந்துஜா

மேலும் சிந்துஜா அமெரிக்க அணியில், விக்கெட் கீப்பராகவும் ஜொலித்துள்ளார். அமெரிக்க வீராங்கனைகளை கீப்பிங்கில் திணறடித்துள்ளார்.

அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணி

அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணி

இதனைப் பார்த்த அமெரிக்க தேசிய மகளிர் கிரிக்கெட் அணி நிர்வாகத்தினர் சிந்துஜா குறித்து ஆலோசித்துள்ளனர். தங்களது அணியில் சிந்துஜாவை சேர்த்துக் கொள்ளவும் முன்வந்தனர்.

குடும்பத்தினர் ஒப்புதல்

குடும்பத்தினர் ஒப்புதல்

இந்த விருப்பத்தை, குடும்பத்தினரின் ஒப்புதலோடு, சிந்துஜா ஏற்றுக் கொண்டார். இப்போது, அமெரிக்க மகளிர் அணிக்காக, சர்வதேச போட்டிகளில், சிந்துஜா களம் இறங்குகிறார்.

உலக டி20 மகளிர் போட்டி

முதல் போட்டியாக, ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள உலக டி20 மகளிர் கிரிக்கெட் கோப்பைக்கான தகுதிப் போட்டியில் சிந்துஜா, அமெரிக்க மகளிர் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Telangana's Sindhuja Reddy has been selected as a member of the US women's national cricket team.
Please Wait while comments are loading...