யப்பா.. இந்தவாட்டி தப்பிச்சோம்டா சாமி... பாகிஸ்தான் நாட்டு டிவிகள் ஒரே குஷி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான இறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டு தொலைகாட்சி பெட்டிகள் உடைப்படுவதில் இருந்து தப்பின.

பிர்மிங்காமில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி சுறறுப் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனால் விரக்தி அடைந்த பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் தங்கள் வீடுகளில் உள்ள டிவிகளை உடைத்து எறிந்தனர். இன்னும் சிலர் டிவியை சாலையில் தூக்கி போட்டும், கல்லால் அடித்தும் சுக்குநூறாக உடைத்தனர்.

சுத்தியல் அடி

சுத்தியல் அடி

அதே போல பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன் அணி தோல்வியடைந்த செய்தியை டிவியில் பார்த்து விட்டு திடீரென சுத்தியலை எடுத்து தொலைகாட்சி பெட்டியை அடித்து உடைத்தார்.

வைரலாக பரவின

இதிபோன்ற சம்பவங்கள் ஏகப்பட்டவை சமூகவலைதளங்களில் பரவின. லீக் போட்டியிலேயே இத்தனை அலப்பறை என்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் போட்டியிடுகின்றனவே என்னவாகுமோ என ரசிகர்கள் நினைத்தனர்.

கோப்பை வென்றது

கோப்பை வென்றது

இறுதி போட்டியில் இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றால், பாகிஸ்தானில் பெரும்பாலான டிவிகள் உடைக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அபாரமாக விளையாடி கோப்பையை தட்டிச் சென்றது.

டிவிகள் தப்பின

டிவிகள் தப்பின

இதனால் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடும் அந்நாட்டு பெண்கள் தங்கள் டிவி உடைப்படுவதில் இருந்து தப்பித்து விட்டதே என்று எண்ணி சந்தேஷப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India- Pakistan ICC Trophy 2017: India lose by 180 runs. Pakistanis Tvs are safe.
Please Wait while comments are loading...