வைரலான டோணி... மீண்டும் கலக்கப்போகும் சென்னை சூப்பர் கிங்ஸ்...டுவிட்டரில் கொண்டாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மஞ்சள் நிற ஜெர்சியில் டோணி கொடுத்த போஸ்தான் இன்றைய டிவிட்டர் ஹிட். மீண்டும் டோணியை சென்னை சூப்பர் கிங்ஸ்ல பார்த்த ரசிகர்கள் 'வாழ்த்துக்கள் தல' என்று வரவேற்று உற்சாகத்தை கொட்டி வருகிறார்கள். இதனால் ஐபிஎல் போட்டி எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீண்டும் திரும்பி வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் பழையபடி வெற்றிகளைக் குவிக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

மஞ்சள் நிற ஜெர்சியில் டோணி காட்சி தருகிறார். அவரது ஜெர்சியின் பின்னால் தல என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அவரது ஜெர்சி எண் 7ம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை டோணி தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வருவதை ரசிகர்கள் இணைய உலகில் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். டுவிட்டரில் உற்சாகப்படுத்தும் ரசிகர்கள், 3வது முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வெல்ல இப்போதே வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

ஒரே தல

இது ஒரு ரசிகரின் டுவிட்டர் பதிவு வாசகம். எற்கெனவே இங்கே பல 'தலை'கள் இருக்கும்போது அவர் தமிழ்நாட்டுக்கே 'தல' ஆக்கி உற்சாகத்தை பொங்கவிட்டுள்ளார்.

தல டோணி

ஒரு ரசிகர் டோணியை 'தல ' என்று கொண்டாடுகிறார். அதே போல தலைவர் என்றால் அது ரஜினிதான் என்கிறார் தெளிவாக.

இது பர்ஸ்ட் லுக்

டோணி போட்ட இன்றய போட்டோ, பின்னால் அவர் ஆடவுள்ள அதிரடி ஆட்டத்தின் பர்ஸ்ட் லுக் என்றும், மெயின் பிச்சர் அவரின் பேட்டிங்கின் போது தெரிய வரும் என்கிறார் ஒரு ரசிகர்.

மாணிக் பாஷாவான 'தல'

மாணிக்கத்திலிருந்து பாஷாவாக மாறிவிட்டார் டோணி. சென்னை சூப்பர் கிங்ஸ் நீதான் வா தல என்று ஒரு ரசிகர் அழைத்து பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thala dhoni photos goes to viral , He wears CSK T-shirt ban ends.
Please Wait while comments are loading...