"தல".. ஜெர்சியை கையில் எடுத்துட்டாரு..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் திரும்பி வருகிறது. ரசிகர்கள் விறுவிறுப்பாக ஆரம்பித்து விட்டனர். அவர்களது விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் டோணி, தல என்று பெயரிடப்பட்ட மஞ்சள் நிற ஜெர்சியுடன் கொடுத்துள்ள போஸ் வெளியாகி ரசிகர்களை துள்ள வைத்து வருகிறது. இந்த போஸ்ட் தற்போது வைரலாகி விட்டது.

ஐபிஎல் அணிகளிலேயே மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வந்தது சென்னைதான். தொட்டதெல்லாம் துலங்கும் என்பதைப் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு மேல் வெற்றிகளைக் குவித்தது.

ஆனால் அதே வேகத்தில் களங்கப்பட்டும் போனது. மேட்ச் பிக்ஸிங்ஸில் சிக்கி 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸும் தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டு தடை முடிந்து மீண்டும் விளையாட வருகின்றன இரு அணிகளும். இந்திய கிரிக்கெட் வாரியமும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

டோணி குஷி

டோணி குஷி

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வருவதை ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களின் உற்சாகத்தில் தற்போது டோணியும் பங்கெடுத்துள்ளார். அதை ஒரு புகைப்படம் மூலமாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

"தல" ஜெர்சி

மஞ்சள் நிற ஜெர்சியில் டோணி காட்சி தருகிறார். அவரது ஜெர்சியின் பின்னால் தல என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அவரது ஜெர்சி எண் 7ம் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியின் நிறம், தல என்பது டோணியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் சொல். இந்தப் புகைப்படத்தை டோணி தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.

செம டீம்

செம டீம்

ஐபிஎல் அணிகளிலேயே சக்தி வாய்ந்த அணியாக திகழ்ந்தது சென்னை தான். 2 முறை கோப்பையை வென்றுள்ளது. 4 முறை 2வது இடத்தைப் பிடித்துள்ளது. சாம்பியன்ஸ் லீக்கையும் 2 முறை வென்றுள்ளது.

Dhoni will be back in Yellow jersey soon-Oneindia Tamil
மீண்டும் ராஜபாட்டை

மீண்டும் ராஜபாட்டை

மீண்டும் திரும்பி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் பழையபடி வெற்றிகளைக் குவிக்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் டோணி அன் கோவின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு களிக்க காத்திருக்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MS Dhoni has come up with Yellow jersey with the word "Thala" and has awed his fans of Chennai Super Kings.
Please Wait while comments are loading...