குவாலிபையர்-1 போட்டியில் புனே-மும்பை இன்று மோதல்.. தோற்ற அணியும் பைனலுக்கு போக முடியும் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே: 10வது ஐபிஎல் சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முக்கியமான முதலாவது குவாலிபையர் ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது.

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான புனே அணி நடப்பு சீசனின் தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் விவேகமாக விளையாடி வெற்றிக் கனிகளை பறித்தது.

புள்ளி பட்டியலில் தற்போது புனே அணி 2வது இடத்தில் உள்ளது. மும்பை முதலிடத்திலுள்ள நிலையில், இன்று இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றில் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

நேரடியாக பைனல்

நேரடியாக பைனல்

பிளேஆப் குவாலிபையர்-1 ரவுண்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக பைனலுக்கு போக முடியும்.

கூடுதல் வசதி

கூடுதல் வசதி

அதேநேரம், இதில் இன்னொரு வசதி உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அல்லது புனே என இரண்டில் எந்த அணி தோற்றாலும், பெங்களூரில் 19ம் தேதி நடைபெறும் குவாலிபையர்-2 ரவுண்டில், எலிமினேட்டர் ரவுண்டில் வென்ற அணியோடு மோத அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். அதில் வெல்லும் அணி, பைனலுக்கு வரும். லீக் ஆட்டங்களில் அதிக புள்ளி எடுத்தகாரணத்தால் டாப்-2 அணிகளான மும்பை, புனேவுக்கு இந்த வாய்ப்பு உள்ளது.

எலிமினேட்டர்

எலிமினேட்டர்

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை-புனே அணிகள் குவாலிபையர்-1 ரவுண்டில் மோத உள்ள நிலையில் வரும் 17ம்தேதி பெங்களூரில் எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. அந்த போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்கள், இன்றைய குவாலிபையர் ஆட்டத்திலல் தோற்ற அணியுடன், குவாலிபையர்-2 போட்டியில் மோத வேண்டும்.

பைனல் போட்டி

பைனல் போட்டி

குவாலிபையர்-2 போட்டி வரும் வெள்ளிக்கிழமை, பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ளது. அதில் வெல்லும் அணி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பைனல் போட்டியில் இன்று, குவாலிபையர்-1ல் வெல்லப்போகும் அணியோடு மோதும். இன்றைய போட்டியில் வெல்லும் அணி ஞாயிறு வரை ஓய்விலும், திட்டமிடலிலும் ஈடுபடலாம் என்பதால் இன்றே வெல்ல, புனே மற்றும் மும்பை அணிகள் முயலும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The first qualifier match will be played on today at the Wankhede Stadium between Mumbai Indians and Rising Pune Supergiant, while the Eliminator will be between defending champions Sunrisers Hyderabad and two-time winners Kolkata Knight Riders at Bangalore's M Chinnaswamy Stadium on May 17.
Please Wait while comments are loading...