பாகிஸ்தான் கேப்டன் தான்.. ஆனா பொண்ணு "நம்ம" ஊரு பாஸ்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சனா மிர், காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.

லண்டனில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை களை கட்டத் தொடங்கி விட்டது. 24ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்தியா உள்ளிட்ட 8 அணிகளும் மல்யுத்தத்திற்குத் தயாராகி வருகின்றன.

ஆடவர் அணிக்கு சற்றும் சளைக்காத திறமையாளர்கள் எல்லா நாட்டு அணிகளும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சனா மிர்.

பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன்தான் சனா மிர். ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் சாய்த்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை இவர்தான்.

1000 ரன்கள்

1000 ரன்கள்

அதேபோல சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 1000 ரன்களைக் குவித்த 6வது வீராங்கனையாகவும் சனா மிர் திகழ்கிறார்.

காஷ்மீரி

காஷ்மீரி

சனா மிர்ருக்கும், இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. ஆம், இவரது பூர்வீகம் காஷ்மீராகும். இவரது குடும்பம் சிறு வயதிலேயே காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்து பாகிஸ்தானுக்கு வந்து விட்டது.

பின்லேடன் கொல்லப்பட்ட அபோதாபாத்

பின்லேடன் கொல்லப்பட்ட அபோதாபாத்

சனா மிர் குடும்பம் அல் கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட அபோதாபாத்தில் வசிக்கிறது. சர்வதேச அளவில் 6வது ரேங்கில் உள்ள சிறந்த பந்து வீச்சாளர் சனா மிர்.

சாதனையாளர்

சாதனையாளர்

சனா மிர்ரின் சாதனைகள் மிகப் பெரியது. இவரது கேப்டன்ஷிப்பில் பல சாதனைகளை அந்த நாட்டு மகளிர் அணி செய்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். 2008 மகளிர் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் தொடர் நாயகியாக தேர்வானவர். கடந்த 9 வருடமாக மகளிர் தர வரிசைப் பட்டியலில் டாப் 20க்குள் நீடிப்பவர்.

இம்ரான் கானின் ரசிகை

இம்ரான் கானின் ரசிகை

இவர் இம்ரான் கானின் ரசிகை. இம்ரான் கான் மட்டுமே பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதன் பிறகு அது கனவாகவே உள்ளது. அவரது ரசிகையான சனா மிர், இந்த உலகக் கோப்பையை வெல்வாரா?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pakistan women's Cricket captain Sana Mir is the 1st Pakistani woman to take 100 wickets in ODIs & over all 6th woman to score 1000 run as well. Her family was from Kashmir and settled in Pakistan.
Please Wait while comments are loading...