டிஎன்பிஎல்.. மதுரை அணியை வென்றது ரூபி திருச்சி வாரியர்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பரபரப்பு வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் லீக் ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

TNPL 2017: Ruby Trichy Warriors won Madurai Super Giant

திருச்சி அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய பரத் ஷங்கர் மற்றும் இந்திரஜித் ஜோடி அணிக்குச் சிறப்பான நிலையை அமைத்துக் கொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது.

TNPL 2017, Trichy Warriors Won By 2 Runs | Oneindia Tamil

மதுரை சூப்பர் ஜெயன்ட் அணியில் அருண் கார்த்திக் மற்றும் சந்திரன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். அருண் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 34 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளை அடித்து மொத்தம் 79 ரன்களை குவித்து அகில் ஸ்ரீநாத் பந்தில் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய சந்திரன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த மதுரை அணி வீரர்கள் ரன் குவிக்காமல் ஆட்டமிழக்க எல். விக்னேஷ் பொறுப்புடன் விளையாடினார். எனினும் மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க தவறினர். இதனால் திருச்சி அணி பரபரப்பு வெற்றியைப் பெற்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ruby Trichy Warriors won Madurai Super Giant in TNPL at Dindigul.
Please Wait while comments are loading...