கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய குஜராத் அணியின் ஆண்ட்ரூ டைய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜ்கோட்: ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்- குஜராத் லைன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது .இதில் கடைசி ஓவரில் குஜராத் அணி வீர் டைய் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

புனே அணியில் அதிகளவாக ஸ்டீவன் ஸ்மீத் 43 ரன்களையும், திரிபாதி 33 ரன்களையும் எடுத்திருந்தனர். அந்த அணியின் முன்னாள் கேப்டன் டோணி 5 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

Tye took a hat-trick with the wickets of Ankit Sharma, MK Tiwary, SN Thakur

ராஹானே மற்றும் தாக்கூர் ரன்கள் ஏதும் எடுக்காமால் பெவிலியன் திரும்பினர். மொத்தத்தில் குஜராத் லயன்ஸ் அணியின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 171 ரன்களை எடுத்திருந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்குவிப்பை கட்டுப்படுத்தி வந்தனர். குறறிப்பாக அந்த அணியின் ஆண்ட்ரூ டைய் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிலும் அவர் வீசிய கடைச ஓவரில் அன்கீத் ஷர்மை, திவாரி, தாக்கூர் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரவீன் குமார், ஜடேஜா, டுவைன் ஸ்மீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் விழ்த்தினர்.

முன்னதாக மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பவுலர் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் வெறும் 9 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Gujarat Lions captain Suresh Raina won the toss and decided to bowl first against Rising Pune Supergiant in match 13 of the ongoing Indian Premier League.Tye took a hat-trick with the wickets of Ankit Sharma, MK Tiwary, SN Thakur
Please Wait while comments are loading...