பிராவோ வீட்டில் தங்கி விழாவை சிறப்பித்த கோஹ்லி அன்டு கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போர்ட் ஆப் ஸ்பெய்ன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராத் கோஹ்லி, ரஹானே, ஷிகார் தவான் ஆகியோர் மேற்கு இந்திய வீரர் டுவைன் பிராவோ வீட்டில் தங்கி ஓய்வு எடுத்தனர்.

இந்தியாவுக்கும், மேற்கு இந்திய தீவுகளுக்கும் இடையே ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பைனில் நடைபெற்று வருகிறது. டிரினிடாட்டில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டதை மேற்கு இந்திய தீவுகளின் முன்னணி வீரர்களும் சகோதரர்களுமான டுவைன் பிராவோ மற்றும் டேரன் பிராவோ ஆகியோர் பார்த்த புகைப்படத்தை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டது.

அதில் இரு வீரர்களும் டோணி, ஹார்த்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் பிராவோ வீட்டில் விராத் கோஹ்லி, ரஹானே, ஷிவான் ஆகியோர் ஓய்வு எடுத்ததாக புகைப்படம் ஒன்று வெளியானது.

கோஹ்லியும், பிராவோவும் மிகவும் நெருக்கமாக உள்ளனர். முன்னதாக, மேற்கு இந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கு இந்தியா வருகை தருவதற்கு முன்னர் டோணி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட்டை சேர்ந்த மச்சான்களை பார்க்க உள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று டுவைன் பிராவோ டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

பிராவோ சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் டோணியுடன் நீண்ட காலமாக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian cricketers Virat Kohli, Ajinkya Rahane, Shiwan relaxing at the West Indies Dwayne bravo's house.
Please Wait while comments are loading...