கோஹ்லிக்கு நேரம் சரியில்லை.. கும்ப்ளேவை வரவேற்று போட்ட டிவீட்டை அழித்தார்.. ரசிகர்கள் கொதிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது அதை வரவேற்று போட்ட டிவீட்டை அழித்து விட்டார் கோஹ்லி. இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் கும்ப்ளே. நாளையுடன் அவர் நியமிக்கப்பட்டு ஒரு வருடம் முடிகிறது. ஆனால் அவர் தனது பதவியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் அவரை வரவேற்று அப்போது போட்ட டிவீட்டை கோஹ்லி அழித்து விட்டதால் பரபரப்பாகியுள்ளது. இது ரசிகர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதயப்பூர்வமாக வரவேற்கிறேன்

கோஹ்லி அப்போது போட்ட டிவீட்டில், அனில் கும்ப்ளே சாருக்கு இதயப்பூர்வமான வரவேற்பு. எங்களுடன் நீங்கள் பணியாற்றப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். உங்களுடன் இணைவதன் மூலம் மாபெரும் காரியங்கள் நடைபெறவுள்ளன என்று கூறியிருந்தார் கோஹ்லி.

அழித்து விட்டார்

அழித்து விட்டார்

ஆனால் இந்த டிவீட் இப்போது அதில் இல்லை. அதை அழித்து விட்டார் கோஹ்லி. கும்ப்ளே வெளியேறியதுமே இதை அழித்து விட்டார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதைப் போய் இப்போது ஏன் அழித்தார் கோஹ்லி என்று பலரும் கண்டித்து வருகின்றனர்.

உண்மையைச் சொல்ல வேண்டும்

கோஹ்லி தனது டிவீட்டை அழித்துள்ளார். அவர் என்ன நடந்தது என்பது குறித்த உண்மையைச் சொல்ல வேண்டும் என்று இவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சில்லி கோஹ்லி

எவ்வளவு சில்லியாக இருக்கிறார் கோஹ்லி என்று இவர் காட்டமாக கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Yet another controversy was added to the Virat Kohli-Anil Kumble saga as the Indian captain deleted his welcome tweet for coach Kumble which he had posted a year ago. Anil Kumble was appointed as the Indian coach a year back on June 23.
Please Wait while comments are loading...