டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி.. அதிவேகமாக 8,000 ரன்களை கடந்து சாதனை !

Posted By:
Subscribe to Oneindia Tamil

பர்மிங்காம்: வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி அதிவேகமாக 8,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, வங்கதேசத்தை இன்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம், 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.

Virat Kohli fastest to complete 8000 ODI runs, breaks AB de Villiers' record

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 40.1 ஓவரில், 1 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது. இதில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 96 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். கோஹ்லி தனது 88-வது ரன்னை எடுத்த போது ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

இதன்மூலம் இந்த மைல்கல்லை குறைந்த இன்னிங்சில் (175 இன்னிங்ஸ்) எட்டிய வீரர் என்ற உலகசாதனை படைத்தார் விராட் கோஹ்லி. இதற்கு முன்னதாக தென் ஆப்ரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 182 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருந்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India's batting mainstay Virat Kohli on Thursday (June 15) touched another milestone by becoming the fastest to score 8000 ODI runs.
Please Wait while comments are loading...