கோஹ்லியின் நிக் நேம் சப்போட்டா தலையன்! எப்படி வந்தது இந்த பெயர் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 27 வயதாகும் இந்திய கிரிக்கெட் வீரர் 27 வயதான விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனைகளை படைத்து வருகிறார். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்குகிறார் விராட் கோஹ்லி. சச்சின் இடத்தை நிரப்பக்கூடிய திறமை கொண்டவர் என உலக மீடியாக்கள் புகழ்கின்றன.

இப்படிப்பட்ட விராட் கோஹ்லியின் செல்லப் பெயர், அதாவது நிக்நேம், சப்போட்டா பழம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதாவது, 'சிக்கூ'.

இந்த தகவல் வெளியானது இப்படித்தான்: கோஹ்லியின் வாழ்க்கை பயணம் குறித்த 'டிரைவன்: தி விராட் கோஹ்லி ஸ்டோரி' என்ற சுயசரிதை புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் டெல்லி கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்ட அஜித் சவுத்ரி இதுபற்றி பல தகவல்களை கூறியுள்ளார்.

உற்சாக கோஹ்லி

உற்சாக கோஹ்லி

ஒருமுறை, ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மும்பைக்கு சென்றிருந்தது டெல்லி அணி. அச்சமயம் விராட் 10 முதல்தர ஆட்டங்களில் கூட ஆடவில்லை. அவரும் அணியில் அங்கம் வகித்தார். டெல்லி அணியில் ஷேவாக், கவுதம் கம்பீர், ரஜத் பாட்டியா, மிதுன் மன்ஹாஸ் ஆகிய பிரபல வீரர்களை பார்த்ததும் அவருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. இது போன்ற பெரிய வீரர்களுடன் பெவிலியனை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் கோஹ்லி மிகவும் மகிழ்ச்சியில் காணப்பட்டார்.

சப்போட்டா தலையன்

சப்போட்டா தலையன்

ஒரு நாள் மாலை, பார்லருக்கு சென்று தனது முடி அலங்காரத்தை வித்தியாசமாக மாற்றிக்கொண்டு தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தார். சில இளம் வீரர்களை நோக்கி வேகமாக ஓடி வந்த விராட் கோஹ்லி தனது புதிய தோற்றம் எப்படி இருக்கிறது என்று ஆர்வமுடன் கேட்டார். அருகில் நின்ற நான் அவரிடம், "இது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. ஆனாலும் தலையை பார்க்க ‘சிக்கூ' (சப்போட்டா பழம்) மாதிரி இருக்கிறது' என்று கேலியாக சொன்னேன். அதுவே அவரது செல்லப்பெயராக ஒட்டிக்கொண்டது. இதை கோஹ்லி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

விளையாட்டில் கவனம்

விளையாட்டில் கவனம்

அப்போது அவரது ஒரே இலக்கும், முயற்சியும், அணியில் தனது இடத்தை நிலைநிறுத்துவதில் மட்டுமே இருந்தது. சவால் அளிக்கக்கூடிய ஒரு மிக திறமையான இளைஞர் என்பதை நான் அறியவில்லை. அதே சமயம் இன்னும் அதிக ரன்கள் குவிக்க வேண்டும், அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதில் அவரது கவனம் இருந்தது. இவ்வாறு அஜித் சவுத்ரி அதில் கூறியுள்ளார்.

குரு மரியாதை

குரு மரியாதை

விராட் கோஹ்லியின் முன்னேற்றத்தில் அவரது ஆரம்ப கால பயிற்சியாளரும், ஆலோசகருமான ராஜ்குமார் ஷர்மாவின் பங்கு முக்கியமானது என்பதை அவரே எப்போதும் பெருமையாக கூறுவார். சுயசரிதை புத்தகத்தில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளதாவது: 2014ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று காலையில், எனது வீட்டிற்கு கோஹ்லியின் சகோதரர் விகாஸ் வருகை தந்தார்.

கார் பரிசு

கார் பரிசு

செல்போனை டயல் செய்து என்னிடம் பேசச்சொல்லி கொடுத்தார் விகாஸ். எதிர்முனையில் விராட் பேசினார். ‘ஆசிரியர் தின வாழ்த்துகள்' என்று கூறினார். அதேநேரத்தில், எனது கையில், விகாஸ் சாவியொன்றை வைத்து அழுத்தினார். எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வீட்டின் வெளியே வந்து பார்க்கும்படி விராட் கோஹ்லி கேட்டுக்கொண்டார். வெளியே வந்து பார்த்தேன். அங்கு அருமையான கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆசிரியர் தின பரிசாக எனக்கு கோஹ்லி வழங்கியுள்ள பரிசு என்று விகாஸ் கூறினார். நான் நெகிழ்ந்துவிட்டேன். இவ்வாறு ராஜ்குமார் ஷர்மா அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Virat Kohli is also known by the pet name 'chiku' which was given by the then Delhi coach Ajit Choudhry when Virat joined the Delhi Ranji team.
Please Wait while comments are loading...