ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை.. முதலிடத்தில் தொடரும் இந்தியா !

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐ.சி.சி. வெளியிட்டுள்ள வருடாந்திர டெஸ்ட் தரவரிசையில் இந்தியா கிரிகிகெட் அணி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆண்டு கணக்கீட்டின் அடிப்படையில் டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 123 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Virat Kohli-led India retain No. 1 Test rank after annual update

தென்ஆப்பிரிக்கா 117 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து இரண்டு புள்ளிகள் சரிந்து 99 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகள் சரிந்த பாகிஸ்தான் 93 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

இலங்கை 91 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 75 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், வங்காள தேசம் 69 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது. ஜிம்பாப்வே புள்ளிகள் ஏதும் பெறாமல் 10-வது இடத்தில் உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
india have retained their number one position in the latest ICC Test Rankings, which were released after the annual update.
Please Wait while comments are loading...