For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'கிரிக்கெட் பைபிள்' அட்டைப் படத்தில் கோஹ்லி

By Veera Kumar

துபாய்: 2016ம் ஆண்டு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி என்று விஸ்டன் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை கேப்டன் என்ற வகையில், கோஹ்லி கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் நிகழ்த்தி வருகின்றார்.

Virat Kohli named Wisden leading cricket of the year

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோலியை விஸ்டன் அறிவித்து அவருக்கு புதிய மகுடத்தை சூட்டியுள்ளது.

கடந்த ஆண்டு விராட் கோஹ்லி 1215 டெஸ்ட் ரன்கள் விளாசினார். இதில் 75.93 என்ற சராசரி எடுத்துள்ளார். 10 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 739 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 92.37 ஆகும். டி20 கிரிக்கெட்டில் 642 ரன்களை 106.83 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

விராட் கோஹ்லிக்கு முன்பாக இந்திய அணியின் விரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

ஒரு கால்ண்டர் ஆண்டில் 6 பேட்ஸ்மேன்களே அதிக ரன்களைக் குவித்துள்ளனர். ஆனாலும் இவை எதுவுமே விராட் கோஹ்லியின் சராசரிக்கு அருகில் இல்லை. எனவேதான், 2017க்கா, விஸ்டன் கிரிக்கட்டர்ஸ் அல்மனாக் அட்டைப்படத்தில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். விஸ்டன் இதழ், கிரிக்கெட்டின் பைபிள் என புகழப்படுவதாகும்.

மேலும் ஆண்டின் 5 கிரிக்கெட் வீரர்களுக்கான விஸ்டன் பட்டியலில் மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் என்று முதல் முறையாக 2 பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் பென் டக்கெட், ரோலண்ட் ஜோன்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

Story first published: Thursday, April 6, 2017, 12:43 [IST]
Other articles published on Apr 6, 2017
English summary
India captain Virat Kohli has been named as the Leading Cricketer in the World in the 2017 edition of the respected Wisden Cricketers' Almanack, -- 'cricket's bible' -- published this week.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X