கங்குலி vs கோஹ்லி.. இந்திய கிரிக்கெட் உலகில் வெடித்த புதிய பனிப்போர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கங்குலிக்கும், விராட் கோஹ்லிக்கும் நடுவேயான பனிப்போரால்தான், இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் தேர்வு தள்ளிப்போனதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் அணி பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும், மூவர் குழுவில்
இடம்பெற்றிருப்பது சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மும்மூர்த்திகள். இவர்கள்தான் கடந்த வரும் நடைபெற்ற நேர்காணலில், அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக தேர்ந்தெடுத்து அனுப்பினர்.

ஆனால், கோஹ்லி, கும்ப்ளேவுக்கு கொடுத்த அவமரியாதை, இம்மும்மூர்த்திகளுக்குமே கோபத்தை உருவாக்கியுள்ளது. அதை கங்குலி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்.

கோபம்

கோபம்

சில தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், கும்ப்ளே பிரச்சினையை இப்படி கையாண்டிருக்க கூடாது என்று கங்குலி வெளிப்படையாகவே தனது அதிருப்தியை தெரிவித்தார். உரிய நபர்கள் தலையிட்டிருந்தால் அப்பிரச்சினை இவ்வளவு தூரம் போயிருக்காது என்றார்.

 சாஸ்திரி மீது விருப்பமில்லை

சாஸ்திரி மீது விருப்பமில்லை

இந்த நிலையில், பயிற்சியாளர் நேர்காணலை மீண்டும் நேற்று நடத்திய குழுவில் கங்குலி இடம் பிடித்திருந்தார். ரவி சாஸ்திரி கடந்த வருடம் போலவே இவ்வருடமும் கோச் பதவிக்கு போட்டியிட்டார். கடந்த முறை இதே குழுவால் நிராகரிக்கப்பட்ட சாஸ்திரி மீண்டும் போட்டியிடுவது கங்குலிக்கு பிடிக்கவில்லை.

 சேவாக் பெஸ்ட்

சேவாக் பெஸ்ட்

கேப்டன் கோஹ்லியின் ஆசியுடன்தான், சாஸ்திரி மீண்டும் போட்டியிட்டுவது கங்குலிக்கும் தெரிந்தே உள்ளது. எனவே ஏனோதானோவென்று இன்டர்வியூ நடத்தாமல், ஸ்ட்ரிக்டாக நடத்தியுள்ளார். அதில் சேவாக் அளித்த பிரசன்டேசன் மற்றும் பதில்கள் கங்குலிக்கு திருப்தியளித்தது. ஏற்கனவே தங்களோடு ஆடியதால் சேவாக் குறித்து சச்சின், லட்சுமணனும்க்கும் நல்ல அபிப்ராயம் உள்ளது.

Sourav Ganguly Turns 45, fans wish him on Social Media-Oneindia Tamil
கோஹ்லிக்கு தெரிய வேண்டும்

கோஹ்லிக்கு தெரிய வேண்டும்

எனவே சேவாக்கை கோச்சாகுவது என அறிவுரை குழு முடிவு செய்துவிட்டது. ஆனால் கோஹ்லி எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் அவரிடம் ஆலோசித்து அவரது மனதை மாற்ற இக்குழு முடிவு செய்துள்ளது. சச்சினும், லட்சுமணனும் சர்ச்சைகளை விரும்பாதவர்கள். எனவே கங்குலியே பிரஸ் மீட் செய்தார். அவர் கூறிய ஒரு வார்த்தை முக்கியமானது. "கோச் எப்படி செயல்படுவார் என்பதை கோஹ்லி புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அவருடன் ஆலோசனை நடத்தி கோச் அறிவிக்கப்படுவார்" என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

 கங்குலி ஹெட்மாஸ்டர்

கங்குலி ஹெட்மாஸ்டர்

கேப்டன் விரும்பினால் கோச்சை நியமித்துவிட முடியாது. கோச் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை என்பதைத்தான் கங்குலி பகிரங்கமாக கூறியுள்ளார். கோஹ்லி மீதான தனது கோபத்தையும், அவர் பயிற்சியாளர் தேர்வில் தலையிடுவதை கண்டிப்பதையும் இந்த பேட்டியில் வெளிப்படுத்திவிட்டார் கங்குலி. கோபம், ஆக்ரோஷத்தில், கோஹ்லி படித்த பள்ளியில், கங்குலி ஹெட்மாஸ்டர். எனவே இருவரின் ஈகோ போர், பயிற்சியாளர் பதவியை இழுபறியில் வைத்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former India captain and CAC member Sourav Ganguly on Monday sent out a terse message to Virat Kohli, saying the Indian captain will need to understand how coaches operate in the wake of his infamous fallout with Anil Kumble.
Please Wait while comments are loading...