இப்படி வெற்றி பெறுவோம் என்று நான் நினைக்கவில்லை: கோஹ்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: வெற்றி பெறுவோம் என நினைத்தோம், இப்படி வெல்வோம் என நினைக்கவில்லை என இந்திய அணி கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்குள் நுழைந்தபிறகு இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியதாவது:

Virat Kohli says "We had a complete game" after wining the match against Bangladesh

அரையிறுதி என்பதால், இந்திய அணிக்கு, ஒரு சிறந்த ஆட்டம் தேவைப்பட்டது. ஆனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நினைக்கவில்லை. நான் நேட்சுரல் கேம்தான் ஆடினேன். ஓப்பனர்கள் சிறப்பாக அடித்தளம் அமைத்தனர். இந்தியாவுக்கு இது ஒரு கம்ப்ளீட் போட்டியாகும்.

ஜாதவ் சர்ப்ரைஸ் பேக்கேஜ் இல்லை. அவர் இந்தியாவில் பல முறை பவுலிங் போட்டுள்ளார். அவர் புத்திசாலி. எப்படி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது அவருக்கு தெரியும். நாங்கள் மொத்தமாக, பாசிட்டிவ் கிரிக்கெட் ஆடியுள்ளோம். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

வங்கதேச கேப்டன், மொர்டசா கூறுகையில், ஒருகட்டத்தில் வங்கதேசம் நினைத்திருந்தால் 320 ரன் அடித்திருக்க முடியும். ஆனால் செட் பேட்ஸ்மேன்கள் இருவர் அடுத்தடுத்து அவுட்டானதுதான் ரன் குவிக்க முடியாமல் போனதற்கு காரணம். வங்கதேச அணிக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக ஆடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kohli on final: "We are going to approach it like any other game".
Please Wait while comments are loading...