கோஹ்லி கேப்டன் பதவிக்கு ஆபத்து.. இந்த இருவரில் ஒருவரை கேப்டனாக்க பிசிசிஐ திட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி பதவிக்கு ஆபத்து காத்துக்கொண்டுள்ளது.

டோணியிடமிருந்து ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பை பெற்றவர் கோஹ்லி. ஆனால் சமீபகாலமாக அவரது நடவடிக்கைகள் சரியில்லை. உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே மதிக்க கூடிய அனில்கும்ப்ளே இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அவரிடம் சண்டை போட்டு விரட்டிவிட்டார் கோஹ்லி.

கும்ப்ளே இருந்தபோது இந்தியா பல தொடர் வெற்றிகளை ருசித்தது. ஆனால் எல்லாமே என்னால்தான் என்பதை போன்ற கோஹ்லியின் நடவடிக்கை கும்ப்ளே வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.

அதிர்ச்சி தோல்விகள்

அதிர்ச்சி தோல்விகள்

இப்போது பிசிசிஐ நிர்வாகத்தின் முழு ஃபோக்கசும் கோஹ்லி மீது வந்துள்ளது. கும்ப்ளேவுக்கு பதிலாக கோஹ்லி என்ன சாதித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு அணி நிர்வாகத்திடம் உள்ளது. இந்த நிலையில்தான், இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பைனல் (கும்ப்ளே-கோஹ்லி மோதல் உச்சத்தில் இருந்தபோது நடந்த போட்டி) மற்றும், மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு போட்டியில் அதிர்ச்சி தோல்வியை கண்டுள்ளது.

கோஹ்லி செயல்பாடு

கோஹ்லி செயல்பாடு

கோஹ்லியின் செயல்பாடுகள்தான் இந்த அதிர்ச்சி தோல்விக்கு காரணம் என உறுதியாக நம்புகிறதாம் பிசிசிஐ. எனவே அவருக்கு மாற்றாக ரஹானே அல்லது, ரோகித் ஷர்மா கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. கோஹ்லியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை வைத்துதான் அவர் பதவி தப்புமா, இல்லையா என்பது தெரியவரும். எனவே இந்திய அணியை தொடர் வெற்றிகளைபெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் கோஹ்லி உள்ளார்.

ரோகித் கலக்கல் கேப்டன்

ரோகித் கலக்கல் கேப்டன்

ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளதால், பிசிசிஐக்கு அவர் மீது ஒரு பார்வை உள்ளது. ரோகித் ஷர்மா அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. தோல்வி பெறும் சூழ்நிலையில் அணி இருந்தாலும், அதை கேப்டன்ஷிப்பால், வெற்றி பாதைக்கு திருப்பிய, ரோகித் ஷர்மாவின் பல ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

ரஹானே திறமைசாலி

ரஹானே திறமைசாலி

கேப்டன் பதவிக்கான பந்தையத்தில் உள்ள இன்னொருவர் ரஹானே. இவர் ஏற்கனவே இந்திய அணிக்கு தலைமை வகித்து வெற்றி பெறச் செய்த அனுபவம் கொண்டவர். பொறுமை இழக்காதவர். ஆனால், இவர் டெஸ்ட் போட்டிக்குறிய முழு டெக்னிக்குகளோடு ஆடுபவர் என்பதால், ஒருநாள் அணியில் இடம் கிடைப்பது சமீபகாலமாக போராட்டமாக உள்ளது. கேப்டனாக வேண்டுமானால் ரஹானே இனி அதிரடியாக ஆடி ஸ்டிரைக் ரேட்டை உயர்த்திக்கொள்வது அவசியம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ajinkya Rahane and Rohit Sharma may replace Virat Kohli as captain as both have proved their worth as a skipper previously. After Anil Kumble stepped down as the India head coach, Kohli has come under immense pressure to deliver as the captain or else will meet the same fate as Kumble did.
Please Wait while comments are loading...