பயிற்சியாளர் ரவிசாஸ்திரி... திடுக்கிடும் திருப்பங்களுக்கு நடுவே எதிர்பார்த்த கிளைமேக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படுவார் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கிய பிசிசிஐ, அப்பதவிக்கு அவரையே நியமித்துள்ளது.

கேப்டன் கோஹ்லியின் விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகளை கிரிக்கெட் அறிவுரை கமிட்டி அரங்கேற்றாது என்பதே இதற்கு காரணம்.

புதிய கோச்சை தேர்ந்தெடுக்க நேற்று நேர்காணல் நடைபெற்றது. அணியின் முன்னாள் மேலாளர் ரவி சாஸ்திரி உட்பட 5 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.

நேர்காணல்

நேர்காணல்

சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் அறிவுரை குழு, இந்த நேர்காணலை நடத்தியது. இதில் சச்சின் டெண்டுல்கர் ஸ்கைப் மூலம் இங்கிலாந்திலிருந்து இணைந்தார்.

ரவி சாஸ்திரிக்கு அதிர்ச்சி

ரவி சாஸ்திரிக்கு அதிர்ச்சி

நேர்காணல் என்பது வெறும் கண்துடைப்புதான், ரவி சாஸ்திரிதான் அடுத்த பயிற்சியாளர் என்று ரசிகர்களும், கிரிக்கெட் பண்டிதர்களும் கணித்து வந்தனர். ஆனால் அந்த கூட்டத்தில் அப்படி எளிதாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. கோஹ்லி வரட்டும், பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம் என கங்குலி அளித்த பேட்டி, ரவி சாஸ்திரி வயிற்றில் கண்டிப்பாக புளி கரைத்திருக்கும்.

Rahul Dravid to Continue as Coach | Sehwag May Face Strict instructions-Oneindia Tamil
சேவாக்கிற்கு முன்னுரிமை

சேவாக்கிற்கு முன்னுரிமை

ஏனெனில், நேர்காணலில் கலந்து கொண்ட வீரேந்திரசேவாக், 2019 உலக கோப்பையை இந்தியா வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று காண்பித்த 'விஷன்' கிரிக்கெட் அறிவுரை கமிட்டியின் மும்மூர்த்திகளையும் வெகுவாக கவர்ந்துவிட்டதாம். சேவாக்தான் இதற்கு சரியான நபர் என்பதை குழு முடிவு செய்துவிட்டதாம். இதற்கு கோஹ்லி எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால்தான் முடிவை நிறுத்தி வைத்து, கோஹ்லியிடம் ஆலோசித்து அவரை சம்மதிக்கச் செய்ய இக்குழு முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது.

சேவாக்கிற்கு ஆசைகாட்டினர்

சேவாக்கிற்கு ஆசைகாட்டினர்

நேற்றைய நேர் காணலில் பங்கேற்ற ரவி சாஸ்திரி, சேவாக், ரிச்சர்ட் பைபஸ், டாம் மூடி மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோரில், சேவாக், சாஸ்திரி, டாம்மூடி ஆகியோர் நல்ல 'பிரசன்டேசன்' அளித்துள்ளனர். அவர்களில் யாரை கோச்சாக்கலாம் என நீண்ட விவாதம் நடந்துள்ளது. அதில் சேவாக் முதலிடம் பிடித்துள்ளார். பல கேள்விகளுக்கு அவர் பளிச்சென பதிலளித்தாராம்.

கோஹ்லிக்கு தர்ம சங்கடம்

கோஹ்லிக்கு தர்ம சங்கடம்

அதேநேரம் சாஸ்திரியும் சிறப்பாக பிரசன்டேசன் செய்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. சேவாக் சிறப்பாக நேர்காணலில் பதிலளித்ததால் அவரையே பயிற்சியாளராக தேர்ந்தெடுக்க மூவர் குழு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டன. கோஹ்லி எதிர்ப்பு தெரிவித்தால், அவரது விருப்பத்தின்பேரிலேயே பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க அனுமதிக்கலாம் என்றும், பிறகு அணியில் சரிவு ஏற்பட்டால் அதற்கு கோஹ்லியே பொறுப்பு என கூறிவிடலாம் என்றும் மூவர் குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் கேப்டனிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாக இன்றே ரவி சாஸ்திரியை கோச்சாக அறிவித்துள்ளனர். நேர்காணலில் பங்கேற்ற மற்றவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As the Cricket Advisory Committee (CAC) added more drama to the appointment of the next Indian coach by holding on to their decision, the fans might be mistaken if they think former Indian all-rounder Ravi Shastri is still the favourite for the job.
Please Wait while comments are loading...