அடுத்த 5 வருடமும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் விவோதான்! ரூ.2,199 கோடிக்கு ஒப்பந்தம்.. 554% அதிகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விவோ நிறுவனம் இன்னும் 5 வருடங்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் டைட்டில் ஸ்பான்சரை பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருடந்தோறும் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்ய பெரிய நிறுவனங்கள் அலைமோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் சீசனில் விவோ நிறுவனம்தான் ஸ்பான்சர் செய்தது.

ஸ்பான்சர்

ஸ்பான்சர்

இந்த நிலையில் 2018 முதல் 2022ம் ஆண்டுவரையிலான ஐபிஎல் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சர் தேடும் வேலையில் ஈடுபட்டிருந்தது பிசிசிஐ.

டெண்டர்

டெண்டர்

இதற்கான டெண்டரில் விவோவும் பங்கேற்றது. இன்று ஸ்பான்சர் யார் என்பதை பிசிசிஐ முடிவு செய்தது. 5 வருடங்களுக்கு ரூ.2,199 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ள விவோ நிறுவனத்திற்கு ஸ்பான்சர்ஷிப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பிசிசிஐக்கு செல்லும்.

554 சதவீதம்

554 சதவீதம்

முந்தைய ஒப்பந்தத்தைவிட இது 554 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், ஒப்பந்த தொகை தாறுமாறாக கூடியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஓப்போவுக்கு அடுத்த இடம்

ஓப்போவுக்கு அடுத்த இடம்

இந்த டெண்டரில் 2வது இடம் பிிடித்த நிறுவனம், ஓப்போ செல்போன் நிறுவனமாகும். அந்த நிறுவனம் 1430 கோடிக்கு டெண்டர் கோரியிருந்தது. விவோ நிறுவனம், 2014-15ல் பெப்சியிடமிருந்து டைட்டில் ஸ்பான்சரை தட்டிப் பறித்தது. பெப்சி ரூ.396 கோடி செலுத்தி ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் விவோ அதை பெற்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VIVO retains title sponsorship for IPL 2018-22. They bid Rs.2,199 Crores, 554% increase over the previous contract.
Please Wait while comments are loading...