நானா இருந்தால் என் விக்கெட்டை தியாகம் செய்திருப்பேன்.. ஜடேஜாவை அசிங்கப்படுத்திய லட்சுமணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் பாண்ட்யாவுக்காக விக்கெட்டை தியாகம் செய்திருப்பேன் என விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்தார்.

6 சிக்சர், 4 பவுண்டரி என தான் மட்டும் தனி பிட்சில் ஆடுவதை போன்ற தோற்றத்தை உருவாக்கி பட்டையை கிளப்பி விளாசி 76 ரன்கள் குவித்திருந்தார் ஹர்திக் பாண்ட்யா.

இந்திய அணியில் அரை சதம் கடந்த ஒரே வீரர் அவர்தான். அவர் போன வேகத்தை பார்த்தால், இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நம்பும் அளவுக்கு இருந்தது.

ஜடேஜா கொடூரம்

ஜடேஜா கொடூரம்

ஆனால், ஹசன் அலி பந்து வீச்சை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா சிங்கிள் ஓடுவதை போல ஓடி வந்துவிட்டு பிறகு திரும்பி கிரீசுக்குள் சென்றார். இதை நம்பி பாண்ட்யா ஏமாந்து ரன்அவுட்டாகிவிட்டார்.

சுயநல ஜடேஜா

சுயநல ஜடேஜா

பாண்ட்யா கிரீசை நோக்கி ஓடி வந்தபோது ஜடேஜா பவுலர் முனைக்கு ஓடியிருக்க வேண்டும். பந்துகளை சந்திக்க தடுமாறியபடி 15 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா அதை செய்யாமல், பாண்ட்யாவுக்கு போட்டியாக பேட்ஸ்மேன் முனைக்கே ஓடினார். இதனால் பாண்ட்யா அவுட்டானார்.

திட்டி தீர்த்தார்

திட்டி தீர்த்தார்

இதனால் பாண்ட்யா கடும் கோபமடைந்தார். திட்டியபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார். பேட்டை காற்றில் வீசியபடியே அவர் பெவிலியன் சென்று சேர்ந்தார். ஜடேஜா அடுத்த சில பந்துகளிலேயே ஒரு ரன் கூட கூடுதலாக எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். இது ரசிகர்களை கடுப்புக்குள்ளாக்கியுள்ளது.

லட்சுமணன்

லட்சுமணன்

இதுகுறித்து போட்டிக்கு பிறகு லட்சுமண் கூறுகையில், நான் ஜடேஜா இடத்தில் இருந்திருந்தால் எனது விக்கெட்டைதான் தியாகம் செய்திருப்பேன். பாண்ட்யா இளைஞர். அவர் வளர வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். சதம் நோக்கி நெருங்கிய பாண்ட்யாவை அவுட் செய்திருக்க கூடாது ஜடேஜா.

சகஜம்தான்

சகஜம்தான்

இருப்பினும் கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் என்பதை பாண்ட்யா உணர வேண்டும். அவர் நல்ல ஆல்ரவுண்டர். திறமையான பவர் ஹிட்டிங் பேட்ஸ்ஸமேன். இப்படி ஒருவரைத்தான் இந்திய அணி விரும்புகிறது. பாண்ட்யா தொடர்ந்து சீராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு லட்சுமணன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VVS Laxman says if he was in the Jadeja position he could have sacrifice hisi wicket instead of Pandya.
Please Wait while comments are loading...