For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரு சொன்னா டோணிக்கு வயசாயிடுச்சின்னு? பாண்ட்யாவே பக்கத்தில் போக முடியவில்லை பாருங்க- வீடியோ

இளம் வீரரான பாண்ட்யாவை ஓவர்-டேக் செய்யும் அளவுக்கு 12 வயது மூத்த டோணி இன்னும் ஃபிட்டாகத்தான் உள்ளார் என்பதற்கு இந்த வீடியோவே நல்ல சான்று.

By Veera Kumar

மொகாலி: டோணிக்கு ஓய்வு பெற வயதாகிவிட்டதா என்பது சார்ந்த சர்ச்சைகள் கிரிக்கெட் உலகில் கடந்த சில வருடங்களாகவே கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

நான் அனைத்து வகை உடல் தகுதியோடுதான் உள்ளேன், என்னால் இன்னமும் சிக்சர்கள் விளாச முடிகிறது என்று டோணியே பல முறை தெளிவுபடுத்தினாலும் கூட, அவர் ஏதாவது ஒரு போட்டியில் போதிய வேகத்தில் ரன் எடுக்காவிட்டாலும், ஓய்வு குறித்த சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுப்பது வழக்கமாகிவிட்டது.

ஆனால், டோணி தனது செயல்பாட்டின் மூலம், தொடர்ந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தபடிதான் உள்ளார்.

மானம் காத்த டோணி

மானம் காத்த டோணி

இலங்கைக்கு எதிரான, தரம்சாலா, முதல் ஒருநாள் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள், வரிசை கட்டி வெளியேறியபோது, அணியை தாங்கி பிடித்து ஓரளவுக்கு, கவுரமான ரன்களை எட்டச் செய்தது டோணி. அந்த மோசமான நிலையிலும், அரை சதம் கடந்த டோணி, இரு சிக்சர்களையும் விளாசியிருந்தார். ஸ்டிரைக் ரேட்டும் பாதகமாக இல்லை.

எதிரணியை கலங்க வைத்தார்

எதிரணியை கலங்க வைத்தார்

எதிரணி பவுலர் சுரங்கா லக்மல் கூட டோணியின் இந்த அசாத்திய திறமையை பாராட்டியிருந்தார். 50 ரன்களுக்குள்ளேயே இந்தியாவை சுருட்டியிருப்போம், டோணிதான் எங்கள் திட்டத்தை தவிடுபொடியாக்கிவிட்டார் என கூறியிருந்தார் லக்மல்.

ஓட்டப் பந்தையம்

ஓட்டப் பந்தையம்

இலங்கைக்கு, எதிராக இன்று மொகாலியில், இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் நிலையில், இந்திய வீரர்கள் அங்கு தீவிர வலைப்பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் டோணியை 100 மீட்டர் தூரத்திற்கு ஓடவிட்டார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அந்த வீடியோவை பிசிசிஐ, டிவிட்டரில் ஷேர் செய்துள்ளது.

வீடியோவை பாருங்கள்

பாண்ட்யாவைவிட, டோணி ஒரு ஸ்டெப் முன்னால் ஓடியுள்ளார் என்பதை, நீங்களே இந்த வீடியோவில் பார்க்க முடியும். இத்தனைக்கும் டோணி வயது 36, பாண்ட்யா வயது 24. இளம் வீரரான பாண்ட்யாவை ஓவர்-டேக் செய்யும் அளவுக்கு 12 வயது மூத்த டோணி இன்னும் ஃபிட்டாகத்தான் உள்ளார் என்பதற்கு இந்த வீடியோவே நல்ல சான்று.

உசேன் போல்ட்தான்

டோணி, ஹர்திக் பாண்ட்யா ஓட்டப்பந்தைய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "எங்க 'தலைக்கு' இதெல்லாம் ஜூஜுப்பி. அவருடன் போட்டி போட்டு ஓட வேண்டியவர் உசேன் போல்ட் மட்டும்தான் என்று பூரித்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, December 13, 2017, 14:10 [IST]
Other articles published on Dec 13, 2017
English summary
A quick 100 metre dash between MS Dhoni and Hardik Pandya. Any guesses on who won it in the end? 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X