டி20: எவின் லீவிஸ் அதிரடி சதம்.. இந்தியாவை எளிதாக வீழ்த்திய மே.இ.தீவுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜமைக்கா: டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது மே.இ.தீவுகள் அணி. எவின் லீவிஸ் சதம் விளாசி அசத்தினார்.

மே.இ.தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கிய டி20 போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. இத்தொடரின் ஒரே டி20 போட்டி இதுதான்.

டாசில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை எடுத்தது.

சராசரி ரன்கள்

சராசரி ரன்கள்

கேப்டன் விராட் கோஹ்லி 39, தவான் 23, ரிஷப் பந்த் 38, தினஏஷ் கார்த்திக் 48, டோணி 2, கேதர் ஜாதவ் 4 ரன்கள் எடுத்தனர், ஜடேஜா 13 ரன்களுடனும், அஸ்வின் 11 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

இதையடுத்து பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 18.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 194 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 18 ரன்களில் குல்தீப் ஜாதவ் பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டான பிறகு, விக்கெட் எதுவும் வீழ்த்த முடியவில்லை.

அள்ளிக்கொடுத்த பவுலர்கள்

அள்ளிக்கொடுத்த பவுலர்கள்

மற்றொரு தொடக்க வீரரான எவின் லீவிஸ், இந்திய பந்து வீச்சை நொறுக்கி தள்ளினார். அவரை சமாளிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் சிக்கி திணறினர். அதிலும் முகமது ஷமி 3 ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கினார். நானும் சளைத்தவர் இல்லை என்பதை போல 4 ஓவர்களில் 39 ரன்களை கொடுத்தார் அஸ்வின்.

புவனேஸ்வர்குமார் பரவாயில்லை

புவனேஸ்வர்குமார் பரவாயில்லை

இந்திய தரப்பில் புவனேஸ்வர்குமார் மட்டுமே இந்த களேபரங்களுக்கு நடுவேயும், பேட்ஸ்மேன்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அவர் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றபோதிலும் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ரவீந்திர ஜடேஜாவோ 3.3 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கினார்.

சதம் கடந்த லீவிஸ்

சதம் கடந்த லீவிஸ்

எவின் லீவிஸ் 12 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உதவியோடு வெறும் 62 பந்துகளில் 125 ரன்களை குவித்து அவுட்டாகாமல் களத்தில் நின்றார். அவருடன் 36 ரன்கள் எடுத்து மார்லன் சாமுவேல்சும் களத்தில் நின்றார். 53 பந்துகளிலேயே சதம் கடந்து அசத்தினார் லீவிஸ். புளோரிடாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 49 பந்துகளில் சதம் கடந்தவர் இந்த லீவிஸ். டி20 போட்டிகளில் அவர் விளாசிய இரு சதங்களும் இந்தியாவுக்கு எதிராக பெறப்பட்டதுதான் எனந்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
West Indies defeated India in the one-off T20I as he guided his side to a resounding nine wicket victory.
Please Wait while comments are loading...