சரி, சாஸ்திரியை பயிற்சியாளராக்க பிசிசிஐ விரும்பினால்.. கங்குலி முடிவு என்னவாக இருக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதற்கு கிரிக்கெட் ஆலோசனைக் குழுத் தலைவர் கங்குலி ஒப்புக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கிரிக்கெட் என்ற விளையாட்டு பார்ப்பவர்களுக்கு விளையாட்டு போல் தோன்றினாலும் அதன் உள்ளே சென்று பார்த்தால்தான் அதில் உள்ள அரசியல் தெரியவரும். நம்மூர் அரசியல் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். அப்பேர்ப்பட்ட புகழை உடையது கிரிக்கெட் அரசியல்.

தற்போது கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் இடையே நடந்த மோதலும் கூட ஒரு வகையில் பார்த்தால் அரசியல்தான். ஈகோ அரசியல்.. நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற ஈகோ மோதல்.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

தற்போது கோஹ்லிக்குப் பிடித்தவரான முன்னாள் அணி இயக்குநர் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாமா என்று பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இவருடன் கோஹ்லி ஒத்துபோவார் என்பதால் பேசாமல் சாஸ்திரியையே பயிற்சியாளராக்கிவிடலாம் என்று பிசிசிஐ கருதுகிறதாம்.

அவர்கள் என்ன சொல்வார்கள்?

அவர்கள் என்ன சொல்வார்கள்?

பிசிசிஐ மேற்கண்டவாறு முடிவு எடுத்துவிட்டால் கிரிக்கெட் அறிவுரை வழிக்காட்டு குழுவில் (சிஏசி) உள்ள கங்குலி, டெண்டுல்கர், லட்சுமண் ஆகியோர் என்ன முடிவு எடுப்பர் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. கங்குலியை பொருத்தவரை அவர் கும்ப்ளேவின் ஆதரவாளர். சச்சின் டெண்டுல்கர் ரவி சாஸ்திரிக்கு ஆதரவு தெரிவிக்கலாம். இருவரும் சொல்வதை ஆமோதிப்பவராக விவிஎஸ் லட்சுமண் இருக்கலாம் என்று தெரிகிறது.

கும்ப்ளேவின் ராஜினாமா

கும்ப்ளேவின் ராஜினாமா

யாராக இருந்தாலும் கேப்டனுடன் ஒத்துப் போகும் கோச்சைத்தான் நியமிக்க பிசிசிஐ விரும்பும். வீரருக்குத்தான் அது முக்கியத்துவம் கொடுக்கும். அந்த வகையில் கோஹ்லி - ரவி சாஸ்திரி கெமிஸ்ட்ரி சரியாக இருக்கும் என்பதால், அந்தத் தேர்வுக்கு பிசிசிஐ பச்சைக் கொடி காட்டலாம்.

கங்குலி ஆதரிப்பாரா

கங்குலி ஆதரிப்பாரா

ஆனால் ஏற்கெனவே பயிற்சியாளர் தேர்வின்போது கங்குலிக்கும்- சாஸ்திரிக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால்தான் கும்ப்ளே தேர்வானார். சாஸ்திரி கோபித்துக் கொண்டார். ஆனால் தற்போது ரவி சாஸ்திரியை பிசிசிஐ விரும்பினால் வேறு வழியில்லாமல் அதற்கு கங்குலி ஆமோதித்துதான் ஆக வேண்டும். மற்றவர்களும் கூட அதே முடிவுக்குத்தான் வர நேரிடும்.

ஜாலி .. ஜோலி

ஜாலி .. ஜோலி

ரவி சாஸ்திரி டோணி கேப்டனாக இருந்தபோது டைரக்டராக இருந்தவர். அவரது வழிகாட்டுதலில் இந்தியா நல்ல வெற்றிகளையும் பெற்றுள்ளது. ஜாலியாக பழகக் கூடியவர். அதேசமயம், தனது ஆலோசனைகளையும் கேப்டனிடம் மற்றும் வீரர்களிடம் கொண்டு செல்லத் தவறாதவர் என்பதால் சாஸ்திரிக்கு வாய்ப்பு அதிகம் என்கிரார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
What will do One of the member of Chief Advisory committee, Ganguly, if BCCI appoints RAvi Shastri as head coacher?
Please Wait while comments are loading...