எந்த தைரியத்தில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் கோஹ்லி? #INDvPAK #INDvsPAK #CT17

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாகிஸ்தானுக்கு சேசிங் சரியாக வராது. இதை உணர்ந்துதான் இம்ரான் கான் போன்றோர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். நிலைமை இப்படி இருக்க எந்த தைரியத்தில் கோஹ்லி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை.

இந்தியாவின் பேட்டிங் வலுவாக உள்ளது என்பது உண்மைதான். சேசிங்கில் நம்மவர்கள் பெஸ்ட்தான். ஆனால் கிரிக்கெட்டில் எதையும் உத்தரவாதம் சொல்ல முடியாது. நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்

Why Kohli opted for fielding first?

பாகிஸ்தான் தற்போது மிகப் பிரமாதமாக விளையாடி வருவதால் அது பெரிய ஸ்கோரை எட்ட வாய்புள்ளது. அப்படி நடந்தால் இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் அத்தனை பேருமே சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் வரும். அதற்கு உத்தரவாதம் கிடையாது. ரோஹித் சொதப்பலாம் அல்லது கோஹ்லி சொதப்பலாம். எது நடந்தாலும் சிக்கல்தானே.

முதல் போட்டியில் பெற்ற பாடத்தை கொண்டு இந்தப் போட்டிக்கு மிகச் சிறப்பான முறையில் தயார் செய்து கொண்டு வந்துள்ளது பாகிஸ்தான் என்பது அதன் பேட்டிங்கைப் பார்த்தாலே தெரிகிறது. ஆனால் நம்மவர்கள் அப்படி எதுவும் ஹோம் ஒர்க் செய்ததாக தெரியவில்லை.

பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை என்பதே உண்மை. கல்யாண வீட்டுக்கு வந்து விட்டு மொய் எழுதுவதைப் போல பந்து வீசிச் செல்கிறார்கள் இந்திய பவுலர்கள். பீல்டிங்கிலும் பிரமாதம் காட்டவில்லை.

இங்கிலாந்து சூழலுக்கு முதலில் பேட் செய்து பெரிய அளவில் ரன் குவிப்பதுதான் புத்திசாலித்தனம். ஆனால் கோஹ்லி சேஸிங்கை விரும்புபவர். எனவே ரிஸ்க் எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கோஹ்லி, யுவராஜ், டோணி என நல்ல பேட்ஸ்மேன்களை கையில் வைத்துக் கொண்டு எதற்காக ரிஸ்க் எடுத்தார் கோஹ்லி என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிச்சயம் இது பெரிய ரிஸ்க்தான். பாகிஸ்தான் அடித்து வெளுத்து 300 ரன்களைத் தாண்டி விட்டால் சேஸிங் கஷ்டமாகி விடுவோம். பார்க்கலாம், கோஹ்லியின் தில் முடிவு சுபமாக முடியுமா இல்லையா என்பதை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Critics are not happy with Kohli's decision to opt fielding after winning the toss in the Finals against Pakistan in CT 2017.
Please Wait while comments are loading...