ஒருநாள் போட்டியில் கோஹ்லி விளையாடுவாரா?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை கிரிக்கெட் அணியுடனான, ஐந்து ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி, நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று கேப்டன் கோஹ்லி கூறியதாக தகவல்கள் பரவி வருவதால், அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கைக்கு சென்றுள்ள, இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று, தொடரையும் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி, பல்லேகலையில் இன்று துவங்கியுள்ளது.

will kohli play in ODI against lanka

அதைத் தொடர்ந்து, இலங்கையுடன், 5 போட்டிகள் கொண்ட, ஒருநாள் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மகேந்திர சிங் டோணி, ஒருநாள் போட்டி தொடருக்காக, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், பும்ரா ஆகியோரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்

முதல் ஒருநாள் போட்டி, தம்புலாவில், வரும், 20ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு நாளை நடக்க உள்ளது. தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோர், ஒருநாள் தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த நிலையில், ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதை அவர் மறுத்து வருகிறார். அணி அறிவிப்பின்போது, உண்மை தெரிந்துவிடும்.


வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ODI team to be pitted against Sri Lanka will be announced tomorrow. Will kohli play the matches?
Please Wait while comments are loading...