கண்டிப்பா இவங்க மேட்ச் பார்க்க வருவாங்கதானே??

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெஷாவர்: ஒவ்வொரு கிரிக்கெட் தொடரும் மறக்க முடியாத அனுபவம்தான். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சில விஷயங்களை சீக்கிரம் மறக்க முடியாது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் மோதியபோது போட்டி முழுவதும் மழை அவ்வப்போது வந்து கெடுத்தது. ஆனாலும் ஆட்டம் தொடர்ந்த்து. இந்தியா அபார வெற்றியும் பெற்றது. அந்தப் போட்டியில் இரண்டு சமாச்சாரங்கள் மக்களைக் கவர்ந்தன.

Will this Indo - Pak pair come to watch the CT Finals?

ஒன்று விஜய் மல்லையா வந்து போட்டியைப் பார்த்து ரசித்தது. 2வது, இந்திய - பாகிஸ்தானிய தம்பதி போட்டியைப் பார்த்த புகைப்படம் வைரல் ஆனது.

அந்தத் தம்பதியில் ஆண் இந்தியர், பெண் பாகிஸ்தானியர். இவர்கள் இருவரும் தத்துமது தேசிய அணிக்கு ஆதரவாக போட்டியைப் பார்த்து ரசித்தது வித்தியாசமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த இரு அணிகளும் மோதவுள்ளதால் மறுபடியும் இவர்கள் நிச்சயம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மொத்த ரசிகர்களும் காத்துள்ளனர்.

வந்துருவீங்கதானே பாஸ்!?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An Indo Pak pair witnessed the league match between India and Pakistan recently. Now all the fans are eagerly waiting to see the couple once again to watch the Indo - Pak finals.
Please Wait while comments are loading...