யுவராஜ் சொதப்ப.. வில்லியம்சன், தவான் வெளுக்க.. டெல்லியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஐ.பி.எல் சீசன் 10-ன் நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஹைதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாசில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது ஹைதராபாத்.

Williamson-Dhawan shine as all-round Hyderabad outclass Delhi by 15 runs

அதிகபட்சமாக வில்லியம்சன் 51 பந்தில் 89 ரன்களும், தவான் 50 பந்தில் 70 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். டெல்லி அணி சார்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு சஞ்சு சாம்சன் 42 (33) ரன்னிலும், நாயர் 33 (23) ரன்னிலும் அவுட்டாகினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sunrisers Hyderabad (SRH) dominated with both bat and ball to beat Delhi Daredevils by 15 runs in an Indian Premier League (IPL) match.
Please Wait while comments are loading...