வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: 9 போட்டிகளில் ஒருமுறை கூட வெல்ல முடியாத பாகிஸ்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெர்பி: மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்துடன் சேர்த்து பாகிஸ்தானுடன் மொத்தம் ஆடிய 9 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.

நமது தேசிய விளையாட்டான ஹாக்கியை காட்டிலும் மக்கள் விரும்பி பார்ப்பது கிரிக்கெட் போட்டியைதான். அதிலும் உலக கோப்பை, ராஞ்சி டிராபி, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் பார்ப்பது அலாதி பிரியம்.

அதிலும் பாகிஸ்தானுடனான போட்டிகளுக்கு கொஞ்சம் மவுசு அதிகம்தான். கிரிக்கெட்டில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என உள்ளது.

 பெண்கள் அணி

பெண்கள் அணி

ஆண்கள் அணிதான் எப்போதும் பிரபலம். பெண்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை விட ஆண்கள் விளையாடும் போட்டிகளுக்குத்தான் கிராக்கி அதிகம்.

 பிரபலமாகி விட்டது

பிரபலமாகி விட்டது

தற்போது பெண்கள் அணியும் பிரபலமாகி விட்டது. இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது ரசிகர்களின் எண்ணமாகும்.

 இங்கிலாந்தில் போட்டி

இங்கிலாந்தில் போட்டி

இங்கிலாந்தில் உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதி வருகின்றன. மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு இன்று மத்தியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

 இதுவரை வென்றதே இல்லை

இதுவரை வென்றதே இல்லை

இதுவரை மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி 8 போட்டிகள் விளையாடி உள்ளது. ஆனால் அதில் ஒன்றில் கூட இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை. இதனால் இன்று இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

 இரு அணிகளும் மும்முரம்

இரு அணிகளும் மும்முரம்

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தாத பாகிஸ்தான் அணியை இந்த முறையும் எப்படியாயினும் வீழ்த்தி விட வேண்டும் என்று இந்திய அணி களம் காண உள்ளது. ஆண்கள் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் அணி தோற்கடித்தது போல் அபாரமாக ஆடி மகளிர் அணியை தோற்கடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியும் மும்முரமாக உள்ளது.

 பீல்டிங் சூப்பர்

பீல்டிங் சூப்பர்

தொடக்கத்தில் டாஸில் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்களை பெற்றது.
அபாரமான பீல்டிங் செய்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பந்துகளை வீசியது. ஒரு முறையேனும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தானும் களம் இறங்கியது. எனினும் இந்தியாவின் டாப் பீல்டிங்கால் 9-ஆவது முறையும் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The pakistan women's cricket team didnot win Indian team in ODIs.
Please Wait while comments are loading...