மகளிர் உலக கோப்பை.. அனல் பறக்கும் இறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் 11வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பைனல் இன்று நடைபெறுகிறது.

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3வது இடத்தை பிடித்தது. அரைஇறுதியில் 6 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்று இந்தியா பைனலுக்கு முன்னேறியது.

இதற்கு முன்பு 2005ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி அதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. தற்போது, இந்தியா பைனலுக்குள் கால் வைப்பது 2வது முறையாகும்.

கேப்டன் சிறப்பு

கேப்டன் சிறப்பு

அதேநேரம், இந்த முறை வென்று வரலாறு படைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் துடிப்போடு உள்ளனர். கேப்டன் மிதாலி ராஜ் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 392 ரன்) குவித்து கேப்டனுக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அரையிறுதி ஆட்டத்தில் 171 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பிற வீராங்கனைகள்

பிற வீராங்கனைகள்

பூனம் ரவுத் 295 ரன்களும் மந்தனா 232 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமான இந்த ஆட்டத்தில் வீராங்கனைகள் அனைவரும் ஒரு சேர எழுச்சி பெற்றால் அது அணிக்கு வலுவூட்டுவதாக அமையும். இந்திய அணி வெற்றி பெற்று மகுடம் சூடினால் உலக கோப்பையை வென்ற முதல் மகளிர் ஆசிய அணி என்ற பெருமையை பெறும்.

அனுபவ வீரர்கள்

அனுபவ வீரர்கள்

2005ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீராங்கனைகளில் மிதாலி ராஜ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி ஆகியோர் இந்த சீசனிலும் களத்தில் இருக்கிறார்கள். மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனைகள் இவர்களுக்குத்தான் உள்ளது.

சுழற்பந்து வீச்சு

சுழற்பந்து வீச்சு

நடப்பு உலக கோப்பையில் சுழற்பந்து வீச்சு மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அதாவது 41 விக்கெட் அணி என்ற பெருமை இந்தியாவுக்குத்தான் சேரும். சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் நம்பிக்கை நாயகியாக திகழ்கிறார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அதேநேரம், மூன்று முறை சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க லீக்கில் இந்தியாவிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு எந்த அணியிடமும் தோல்வியடையாமல் அந்த அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. பியூமோன்ட் (387 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (363 ரன்), விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் (351 ரன்) ஆகியோர் இங்கிலாந்து அணியின் முக்கிய ஆட்டக்காரர்களாகும்.

இரு அணிகள் பலம்

இரு அணிகள் பலம்

இவ்விரு அணிகளும் இதுவரை 62 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 26ல் இந்தியாவும், 34ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 10 ஆட்டங்களில் 4ல் இந்தியாவும், 6-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டு இருக்கின்றன. ஏறத்தாழ இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India take on England in the final of the 2017 ICC Women’s World Cup at Lord’s in London on Sunday.
Please Wait while comments are loading...