தொடர்ந்து 7 சர்வதேச அரைசதங்கள்.. இந்திய கேப்டன் மிதாலி ராஜ் வெற்றி ரகசியம் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐசிசி பெண்கள் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 84 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அசத்தினார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ். ஓப்பனிங்கில் மந்தனா கலக்கியதை போல, ஒன்டவுனில் மிதாலி ராஜ் கலக்கினார்.

'கேப்டன் நாக்' என்பார்களே அந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மிதாலி ராஜ். 50 ஓவர்களில் 281 ரன்களை குவித்தது இந்தியா. வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு ஷாக் கொடுத்தது.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

இந்நிலையில், மிதாலி ராஜ் புத்தகம் ஒன்றை படிப்பது போன்ற போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஆட்ட நேரத்தில் நடுவே இந்த புத்தகத்தை அவர் படித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

சாதனை அரை சதம்

சாதனை அரை சதம்

மிதாலி ராஜ் அன்று விளாசிய அரை சதம், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளாசிய தொடர்ச்சியான 7வது அரை சதமாகும். லிண்ட்சே ரீலர், சர்லோட்டே எட்வர்ட்ஸ், எல்லய்சே பெர்ரி ஆகியோர் 6 அரை சதங்களை தொடர்ச்சியாக விளாசியது முந்தைய சாதனை. அதை மிதாலி முறியடித்தார்.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம்

ஓன்டவுன் இறங்குவதற்கு முன்பாக மிதாலி சாவகாசமாக புத்தகம் படித்த காட்சி ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. பதற்றமேயில்லாம், களத்தை கவனிக்காமல் புத்தகம் படித்தபடி ஆடி அசத்தியது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் நெஞ்சங்களை துளைத்தெடுத்தது.

புத்தகம்தான் வாசிப்பேன்

புத்தகம்தான் வாசிப்பேன்

இதுகுறித்து அவரே கூறியுள்ளதாவது: கின்ட்லே மூலம் வாசிக்க எங்களுக்கு அனுமதி கிடையாது. எனவே புத்தகத்தை வாஹ்கி படித்தேன். ஃபீல்டிங் கோச்சிடம் கடன் வாங்கி அந்த புத்தகத்தை படித்தேன்.

மன அமைதி

life's essentials என்ற புத்தகத்தைதான் நான் படித்தேன். பேட்டிங்கிற்காக இறங்கும் முன்புகூட நான் புத்தகம் வாசிப்பது வழக்கம். என்னை பதற்றத்தில் இருந்து விடுவிக்கும் மந்திரசாவி புத்தகங்கள்தான். நான் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி சாதிக்க இதுவே காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian captain Mithali Raj smashed a brilliant 71 off 84 balls to guide her team to a stirring win against hosts England in their ICC Women's World Cup 2017 opening game.India scored 281 in 50 overs for the loss of 3 wickets, but images of Raj reading a book just before her coming into the middle to start her innings went viral over social media.
Please Wait while comments are loading...