மேட்ச் வார்ம் அப் தான்.. ஆனால் இந்தியா செம ஹாட்.. தாங்க முடியாமல் தெறித்து ஓடிய இலங்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையே உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி, இலங்கையை வீழ்த்தியது.

கேப்டன் மித்தாலி ராஜின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை தோல்வியைத் தழுவியது. பேட்டிங்கின்போது 89 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து அசத்தினார் மித்தாலி. மறுபக்கம் பூனம் ராத் 69 ரன்களைக் குவித்து அருமையான பார்மை வெளிப்படுத்தினார்.

Women's World Cup: Mithali Raj shines as India thrash Sri Lanka in warm-up match

தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 44 ரன்களைக் குவிக்க இந்தியா 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 275 ரன்களைக் குவித்தது.

பின்னர் சேஸிங்கைத் தொடங்கிய இலங்கை ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. குறிப்பாக நடுக்களத்தில் திலானி மனதோரா 49 ரன்களையும், விக்கெட் கீப்பர் பிரசாதினி வீரக்கொடி 39 ரன்களையும் குவித்தனர்.

ஆனால் இந்திய பந்து வீச்சாளர் ராஜேஸ்வரி கெய்க்வாட் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார். இதனால் இலங்கை 166 ரன்களில் சுருண்டது. இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India beat Sri Lanka by 106 runs in Chesterfield in their warm up match against Lanka in the Women's cricket world cup. India were 275/8 in 50 overs. In reply, Sri Lanka were bundled out for 166 in 48.4 overs
Please Wait while comments are loading...