15.6 கோடி பேரை "கட்டிப் போட்ட" மிதாலி ராஜ் அன் கோ!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பை நமது அணி இழந்தது. ஆனாலும், இந்தப் போட்டியில் அவர்களுடைய திறமையான ஆட்டத்தால் மக்களை கவர்ந்தனர்.

"கோப்பையை வெல்லாவிட்டாலும், 125 கோடி மக்களின் அபிமானத்தை வென்றுள்ளீர்கள்" என்று, நமது வீராங்கனைகளிடம், பிரதமர் மோடி நேரில் வாழ்த்து கூறினார்.

உள்ளூரில் நடக்கும் போட்டிகளைக் கூட, டிவியில் பார்க்கும் ரசிகர்கள், பெண்கள் கிரிக்கெட் போட்டி என்றால், சேனலை மாற்றிவிடுவார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியின்போது, 15.6 கோடி இந்தியர்களை, டிவி முன் உட்கார வைத்துவிட்டனர் நமது வீராங்கனைகள்.

18 கோடி பேர்

18 கோடி பேர்

சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உலகக் கோப்பையை, உலகெங்கும், 18 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதற்கு முன், 2013ல் நடந்த போட்டியைவிட, பார்வையாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை விட

தென் ஆப்பிரிக்காவை விட

தென்னாப்பிரிக்காவில், எட்டு மடங்கு அளவுக்கு மக்களை டிவி முன் கட்டிப் போட்டது இந்த போட்டி. இது உண்மைதான். இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டது இந்த உலகக் கோப்பை போட்டி.

இந்தியாவில் மட்டும் 15.6 கோடி

இந்தியாவில் மட்டும் 15.6 கோடி

இந்தியாவில், 15.6 கோடி மக்கள், பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளை பார்த்துள்ளனர். இதில், 8 கோடி பேர் ஊரகப் பகுதியைச் சேர்ந்தவர்கள். பைனலை மட்டும், ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, 12.6 கோடி பேர், நகத்தை கடித்தபடி பார்த்துள்ளனர். இந்தியாவில் மட்டும், 5 மடங்கு பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர்.

மிதாலிக்கு நன்றி

மிதாலிக்கு நன்றி

கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான, நமது கிரிக்கெட் அணி, இந்த உலகக் கோப்பையில், தரவரிசையில், முதல் மூன்று இடங்களில் உள்ள, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை வென்றது. இதன் மூலம், இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் மீது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
recently held womens cricket world cup created a new record in viewerhip
Please Wait while comments are loading...