லேடி சச்சினாக.. இல்லை இல்லை.. லேடி கபிலாக மாறுவாரா மித்தாலி ராஜ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லார்ட்ஸ்: லேடி சச்சின் என்று மித்தாலியை சிலர் கூறுகிறார்கள். ஆனால் சச்சினையெல்லாம் தாண்டி வேறு லெவலுக்குப் போய்க் கொண்டுள்ளார் இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ். இப்போது இன்னொரு கபில் தேவாக அவர் மாறக் காத்திருக்கிறார்.

லேடி சச்சின் என்பது மித்தாலிக்கு ரசிகர்கள் வைத்துள்ள செல்லப் பெயர். ஆனால் சச்சின் செய்த சாதனைகளுடன் ஒப்பிடுகையில் மித்தாலியின் ரேஞ்ச் வேறாக உள்ளது. சச்சின் பேட்ஸ்மேனாக ஜொலித்தவர். ஆனால் கேப்டனாக அவர் சோபித்ததில்லை.

ஆனால் மித்தாலி ராஜ் நல்ல ஆட்டக்காரராக, நல்ல கேப்டனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தரும் வாய்ப்புக்கு வெகு அருகே வந்து நிற்கிறார் மித்தாலி.

லார்ட்ஸ் சாதனைக்கு வெயிட்டிங்

லார்ட்ஸ் சாதனைக்கு வெயிட்டிங்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இங்கு இந்தியா வென்றால் அது மறக்க முடியாத வெற்றியாக அமையும்.

முதல் முறையாக

முதல் முறையாக

இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் 1932ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் 1983ம் ஆண்டு இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.

ICC Women World Cup 2017: India defeat Australia to enter final, highlights-Oneindia Tamil
கபில் கலக்கல்

கபில் கலக்கல்

இந்த லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவை வெற்றிக் கோப்பையை ஏந்த வைத்தவர் ஹரியானா சிங்கம் கபில்தேவ். அதன் பிறகு நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் டோணிதான் நமக்கு 2வது கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார்.

கபிலாக மாறுவாரா மித்தாலி

கபிலாக மாறுவாரா மித்தாலி

இப்போது இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் இந்தியா - இங்கிலாந்து இடையிலான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா வென்றால் அதில் பல சாதனைகள் நமக்கு கிடைக்கும். இந்தியாவுக்கு இது முதல் கோப்பையாக அமையும். கபிலுக்குப் பிறகு அதே மைதானத்தில் சாதனை படைத்த கேப்டன் என்ற பெயர் மித்தாலிக்கும் கிடைக்கும்.

இன்னொரு பெருமை

இன்னொரு பெருமை

இந்திய ஆடவர் அணிக்கும் இங்குதான் முதல் கோப்பை கிடைத்தது. அதேபோல மகளிர் அணி வென்றால், மகளிர் அணியின் முதல் கோப்பையும் இதே மைதானத்தில் கிடைத்த பெருமை நமக்கு வந்து சேரும்.

2வது இறுதிப் போட்டி

2வது இறுதிப் போட்டி

இந்தியா இதற்கு முன்பு 2005ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால் அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. தற்போது 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இந்த முறை மித்தாலி அன் கோவின் தீப்பொறி ஆட்டம் காரணமாக இந்தியா நிச்சயம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

லேடி கபில் தேவாக மித்தாலி ராஜ் மாறப் போகும் அந்த தருணத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் இப்போது இருந்தே வெயிட்டிங்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lord's Cricket Ground has a special place in Indian cricket. It is at this venue where India played their first-ever Test, in June, 1932. And in June 1983, India's maiden World Cup triumph happened under Kapil Dev's captaincy.
Please Wait while comments are loading...