கோஹ்லிதான் எனக்கு ரோல் மாடல்.. சொல்வது டபிள்யூடபிள்யூஇ ராக் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 'டபுள்யூ டபுள்யூ இ' வீரர் ஒருவர் கோஹ்லிதான் தனக்கு ரோல் மாடல் என குறிப்பிட்டு இருக்கிறார். ஃபின் பாலர் என்ற இவர்தான் தற்போது அமெரிக்க 'டபுள்யூ டபுள்யூ இ' உலகின் ராக் ஸ்டார்.

'டபுள்யூ டபுள்யூ இ' குழுவில் இணைந்த சில நாட்களிலேயே இவர் பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். இந்த நிலையில் இவர் கோஹ்லிதான் தனக்கு ரோல்மாடல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ரெஸ்லிங் விளையாடும் போது கோஹ்லியை நினைத்துக் கொள்வேன் எனவும் கூறியிருக்கிறார். அவர் மூலமாக தன்னுடைய ரெஸ்லிங் விளையாட்டில் நிறைய மாற்றங்கள் வந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 கோஹ்லியின் ரசிக படை

கோஹ்லியின் ரசிக படை

உலகின் அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்களின் பட்டியலில் எப்போதும் கிரிக்கெட் வீரர்கள் முன்னிலையில் இருக்க மாட்டார்கள். கால்பந்து வீரர்களுக்கும், ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் அடுத்தபடியாகத்தான் கிரிக்கெட் வீரர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த வரலாற்றை முறியடித்து நானும் மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு சமம்தான் என நிரூபித்து இருக்கிறார் விராட் கோஹ்லி. இப்போது உலகத்திலேயே மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக பேஸ்புக், டிவிட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே வீரர் கோஹ்லி மட்டுமே.

 'டபுள்யூ டபுள்யூ இ' உலகிலும் ஒரு ரசிகர்

'டபுள்யூ டபுள்யூ இ' உலகிலும் ஒரு ரசிகர்

தற்போது கோஹ்லிக்கு 'டபுள்யூ டபுள்யூ இ' உலகில் இருந்தும் ஒரு ரசிகர் உருவாகி இருக்கிறார். ஃபின் பாலர் என்ற டபுள்யூ டபுள்யூ இ சாம்பியன் தான் அந்த ரசிகர். அவர் டபுள்யூ டபுள்யூ இ குழுவில் இணைந்த நாளில் இருந்தே 'கெட்ட ஆட்டம்' போட்டுக் கொண்டு இருக்கிறார். தொடக்கத்தில் கொடூர மேக்கப்புடன் வந்த இவர் இப்போது சாதரணமாக வராத தொடங்கி இருக்கிறார். இன்றைய நாளில் அவருக்கு டபுள்யூ டபுள்யூ இ உலகில் நிறைய ரசிகர்கள்இருக்கின்றனர்.

 கோஹ்லி எனக்கு ரோல்மாடல்

கோஹ்லி எனக்கு ரோல்மாடல்

இந்த நிலையில் அயர்லாந்தை சேர்ந்த அவர் கோஹ்லிதான் எனக்கு ரோல்மாடல் என கூறியிருக்கிறார். தொலைக்காட்சி ஒன்றிருக்கு அவர் அளித்த பேட்டியில் "நான் இப்போது பெரிய ஆளாக வளர்ந்து நிற்பதற்கு கோஹ்லியும் ஒரு காரணம். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்து நான் என்னை மாற்றிக் கொண்டேன். என்னுடைய ஒவ்வொரு அசைவிலும் இப்போது நான் அவரைத்தான் பின் தொடர்கிறேன் '' என்று கூறினார். மேலும் அவர் தன்னை மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர் என்றும் கூறினார்.

 என்னை மாற்றியது கோஹ்லி

என்னை மாற்றியது கோஹ்லி

அவர் தனக்கு கோஹ்லியை எப்படி தெரியும் என்றும் இந்த பேட்டியில் குறிப்பிட்டார். அதில் ''அயர்லாந்து கிரிக்கெட் அணி மிகவும் சிறிய அணியாக அறிமுகமான போது கோஹ்லியின் ஆட்டத்தை பார்த்தேன் அப்போதில் இருந்து நான் அவரது ரசிகன். இதற்கு முன்பு என் ரசிகர்களிடம் நான் முரடாக நடந்து கொண்டேன். தற்போது கோஹ்லியை பார்த்து திருந்தி இருக்கிறேன்'' என்று கூறினார். ஏற்கனவே இங்கிலாந்து பெண்கள் அணியின் 'டேனியல்லே' என்ற பெண் கோஹ்லியை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
WWE champion Finn Balor says Kohli is his role model. He also added the he follow Kohli in his every actions.
Please Wait while comments are loading...