ஒரு யுவியையே தாங்க முடியல... இதுல இன்னொருத்தரா.. தாங்குமா புவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன் : பிர்மிங்காமில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியினபோது, யுவராஜ் சிங் தனது உருவ ஒற்றுமை கொண்ட ரசிகரை சந்தித்து ஆச்சரியப்பட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

உலகில் ஒரே உருவம் கொண்ட 7 பேர் இருப்பார்கள் என்று சொல்வார்கள். அதற்கேற்ப நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில் நம் உறவினர்களோ, நண்பர்களோ அவர்களது உருவ ஒற்றுமை கொண்டவர்களாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

அவர்களிடம் சென்று நீங்கள் என் நண்பரை போல் இருக்கிறீர்கள், உறவினரை போல் இருக்கிறீர்கள் என்று கூறுவதும் உண்டு.

குழப்பங்கள்

குழப்பங்கள்

இந்த உருவ ஒற்றுமையினால் பல்வேறு குழப்பங்களும் நடைபெறுகின்றன. அதாவது கடந்த 2000-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை போன்று உடலமைப்பு , ஒத்த உருவம் கொண்ட பஞ்சாபி ஒருவரை அவர்தான் பிரதமர் என நினைத்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். பின்னர் வீட்டில் உள்ள டிவியை பார்த்து புரிந்து கொண்ட அந்த பஞ்சாபி முதியவர் தன்னை பாராட்டும் மக்களுக்கு தான் பிரதமர் அல்ல என்று தெரிவித்தார்.

பீட்சா கடையில் கோஹ்லி

பீட்சா கடையில் கோஹ்லி

கராச்சியில் உள்ள ஒரு பீட்சாக் கடைக்குப் போன முஸ்தபா சொஹைல் என்பவர் அங்கு பீட்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார். என்னடா இது கோஹ்லி வந்து பீட்சா தயாரிக்கிறாரே என்றும் குழம்பிப் போய் விட்டார்.உண்மையில் அது கோஹ்லி இல்லை. கோஹ்லி போன்ற உருவம் கொண்ட பாகிஸ்தானியர்தான்.

வங்கதேசத்துடன் ஆட்டம்

வங்கதேசத்துடன் ஆட்டம்

இந்தியா, வங்கதேசத்துடனான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்று போட்டி கடந்த வியாழக்கிழமை பிர்மிங்காமில் நடைபெற்றது. இது யுவராஜ் சிங்குக்கு 300-ஆவது போட்டியாகும். இந்திய அளவில் 300 போட்டிகளில் ஆடிய வீரர்களில் யுவிக்கு 5-ஆவது இடம். ஆட்டம் முடிந்தவுடன் மைதானத்தில் ஒரு ஸ்பெஷல் ரசிகர் ஒருவர் யுவிக்காக காத்திருந்தார்.

ஒத்த உருவம்

அவர் பார்ப்பதற்கு யுவராஜ் போலவே இருந்தார். யுவி அணிந்திருந்த சீருடையை போன்று அவரும் அணிந்திருந்தார். அதே தாடி. பின்னர் யுவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை விசித்திரமாக இருந்தது. அசல் யார், போலி யார் என்று கண்டுபிடிப்பது சிரமமாகிவிட்டது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Another look alike in England. This time Yuvraj could find his look alike in the Birmingham during the clash of India and Bangladesh.CT match.
Please Wait while comments are loading...