For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் புறக்கணிப்பிற்கு பதிலடி கொடுத்த யுவராஜ், கம்பீர்.. என்னா பேட்டிங்!

சையத் முஸ்தபா அலி கோப்பையின் டி-20 போட்டியில் யுவராஜ், கம்பீர் மிகவும் சிறப்பாக ஆடி இருக்கிறார்கள்.

By Shyamsundar

டெல்லி: வயதானவர்கள் சொல்லும் ''ஒரு காலத்தில் எப்படி இருந்தோம் தெரியுமா?'' என்ற வசனம் இந்திய கிரிக்கெட் அணியில் கம்பீருக்கும், யுவராஜ் சிங்கிற்கும் கண்டிப்பாக பொருந்தும். அந்த அளவிற்கு அவர்கள் தற்போது இந்திய அணியால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்திய அணிதான் இவர்களை கைவிட்டது என்றால் ஐபிஎல் போட்டியும் கைவிட்டுவிட்டது. இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கம்பீரும் யுவராஜும் நேற்று மாறி மாறி பேட்டிங் செய்து இருக்கிறார்கள்.

சையத் முஸ்தபா அலி கோப்பையின் டி-20 போட்டியில் இவர்கள் ஆடிய ருத்ர தாண்டவத்தை மொத்த ஐபிஎல் உரிமையாளர்களும் வாயை பிளந்து பார்த்து இருக்கிறார்கள்.

எடுக்கவில்லை

எடுக்கவில்லை

ஐபிஎல் 2014ல் பெங்களூரு அணிக்காக 14 கோடி கொடுத்து வாங்கப்பட்டார் யுவராஜ் சிங். அதற்கு அடுத்த வருடமே டெல்லி அணிக்காக 16 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். அதன் பின் சென்ற வருடம் சன் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் இந்த முறை ஐபில் ரிட்டென்ஷனில் அவர் பெயர் இல்லை. மேலும் கம்பீரும் இதில் இடம்பிடிக்கவில்லை.

யுவராஜ் பேட்டிங்

யுவராஜ் பேட்டிங்

இதற்கு பதில் அளிக்கும் விதமாக யுவராஜ் சிங் நேற்று சையத் முஸ்தபா அலி கோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். 4 பவுண்டரி 1 சிக்ஸ் என இவர் ருத்ர தாண்டவம் ஆடினார். 40 பந்துகளில் 50 ரன் அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பினார். இதனால் இவரது பஞ்சாப் அணி 170 ரன்கள் எடுத்தது.

கம்பீர்

கம்பீர்

நானும் எதற்கும் குறைந்தவன் இல்லை என்று அடுத்து இறங்கிய கம்பீர் நிரூபித்தார். இரண்டு சிக்ஸ், ஆறு பவுண்டரி அடித்த கம்பீர் 54 பந்தில் 66 ரன் எடுத்தார். யுவராஜும் இவரது ஆட்டத்தை பார்த்து மலைத்து போனார். ஆனால் 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்து டெல்லி அணி பஞ்சாப்பிடம் தோற்று போனது.

ஏலம்

ஏலம்

இந்த ஆட்டத்தை ஐபிஎல் உரிமையாளர்கள் அனைவரும் பார்த்து இருக்கிறார்கள். இந்த போட்டியில் நன்றாக விளையாடிய வீரர்கள் ஐபிஎல் அணிக்கு மிக அதிக விலைக்கு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே கம்பீரும், யுவராஜும் மீண்டும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படலாம்.

Story first published: Wednesday, January 10, 2018, 10:27 [IST]
Other articles published on Jan 10, 2018
English summary
Yuvraj & Gambhir gave a stunning performance in Syed Mushtaq Ali Trophy after not picked in IPL retention Yuvraj Singh 50 off 40 balls take his team to the victory. Gautam Gambhir 66 off 54 balls gave him huge round of applause from audience.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X