For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ்சிங் படைக்கப்போகும் 'முச்சதம்' சாதனை! ரசிகர்கள் குஷி

திறமையின் களஞ்சியமாக பார்க்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சர்வதேச ஒரு நாள் போட்டியில் 300-ஆவது போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்.

By Lakshmi Priya

பிர்மிங்காம்: 17 வயதில் கிரிக்கெட் போட்டியை விளையாடி வரும் யுவராஜ் சிங் 300-ஆவது போட்டியை ஆடவுள்ளார். இதன் மூலம் 300-ஆவது போட்டியை தொட்ட இந்திய வீரர்களில் 5ஆம் நபராக யுவி விளங்குவார்.

யுவராஜ் சிங் தனது 17-ஆவது வயதில் கிரிக்கெட் விளையாட்டில் காலடி எடுத்து வைத்தார். அவர் இடது கையாட்டக்காரராவார்.ஒரு காலத்தில் கிரிக்கெட் மேட்சுகளில் வெற்றிக்கு காரணமாக பேசப்பட்டவர்கள் என்றால் அவர்கள் கபில் தேவ், டெண்டுல்கர் ஆகியோராகும். பின்னர் இந்திய கிரிக்கெட் வெற்றிக்கு யுவராஜ்சிங்கும் காரணமாக பேசப்பட்டார். கடந்த 2011இல் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.அதில் ஒரு போட்டியில் 127 பந்துகளில் 150 ரன்களை குவித்தார்.

Yuvraj Singh set to play 300th ODI: Decoding one of India's greatest ever ODI player

அவர் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் இதுவரை 299 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது இந்தியா- வங்கதேசம் இடையே லண்டன் பிர்மிங்காமில் சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த போட்டியானது யுவராஜுக்கு 300-ஆவது போட்டியாகும். இதன் மூலம் அதிக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களில் 5ஆவது இடத்தையும், ஒட்டுமொத்த வீரர்களில் 19-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் இதுவரை 463 ஒருநாள் மேட்சுகளுடன் முதல் இடத்தையும் (இந்திய அளவில்) அதற்கடுத்தபடியாக ராகுல் டிராவிட் 340 போட்டிகளிலும், அசாருதீன் 334 போட்டிகளிலும், கங்குலி 308 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் 32 பந்துகளில் 53 ரன்களை குவித்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Story first published: Tuesday, June 13, 2017, 17:13 [IST]
Other articles published on Jun 13, 2017
English summary
Thursday's ICC Champions Trophy semi-final between India and Bangladesh in Birmingham will carry a little more for one member of the defending champions' squad: Yuvraj Singh, who will play his 300th ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X