For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019ல் இந்தியாவுக்கு கிடைக்குமா 2 "லட்டு"??

By Staff

டெல்லி: 2019ல் நடக்க உள்ள, 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான போட்டியில் இந்தியா களமிறங்கியுள்ளது. அதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. முதல் முறையாக கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்துவதுடன், அதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில், 2019ல் நடக்க உள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமை கேட்டு இந்தியா விண்ணப்பித்துள்ளது.

 புதிய சாதனை

புதிய சாதனை

தற்போது நடந்து வரும் போட்டிகளை, 8 லட்சம் பேர் நேரில் கண்டு ரசித்துள்ளனர். 2011ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்த சாதனையை கால்பந்து உலகக் கோப்பை முறியடிக்கும்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டை விட

உலகக் கோப்பை கிரிக்கெட்டை விட

2011 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை, 11 லட்சம் பேர் நேரில் பார்த்துள்ளனர். அதே நேரத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களை 8 லட்சம் பேர் பாரத்துள்ளனர்.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

கோல்கத்தாவில் நடக்கும் பைனலுக்கான 67 ஆயிரம் டிக்கெட் ஏற்கனவே புல். காலிறுதி மற்றும் அரை இறுதி போட்டிகளையும் சேர்த்தால், கிரிக்கெட்டுக்கு இணையாக அல்லது அதை கால்பந்து மிஞ்சும் வாய்ப்பு உள்ளது.

கிரிக்கெட்டுக்குப் போட்டியாக வளரும் கால்பந்து

கிரிக்கெட்டுக்குப் போட்டியாக வளரும் கால்பந்து

`இந்த உலகக் கோப்பை போட்டியை இந்தியா மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. டிக்கெட் விற்பனைக்கு பெரிதாக முயற்சி எடுக்கவில்லை என்று கூறபட்ட நிலையிலேயே 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இது இந்தியாவில் கால்பந்து பிரபலமாகி வருவதை காட்டுகிறது.

2019ல் 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து

2019ல் 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து

2019ல் நடக்க உள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு, இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்' என்கிறார் இந்த உலகக் கோப்பை போட்டியின் இயக்குநர் ஜாவியர் செப்பி. 2019ல் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியுடன், 20 வயதுக்குட்பட்டோருக்கான பிபா கால்பந்து உலகக் கோப்பையயும் வெல்ல அணிகளை தயார் செய்ய வேண்டியதுதான்.

Story first published: Tuesday, October 17, 2017, 14:50 [IST]
Other articles published on Oct 17, 2017
English summary
Chance for India to host another world cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X