For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேவெதருக்கு கிடைத்த !1.5 கிலோ 24 காரட் தங்கம், 3,360 வைரக்கற்கள், 160 மரகதக்கற்களுடன் 'பரிசு பெல்ட்

தொழில்முறை குத்துச்சண்டையில் தோல்வியையே இன்றுவரை சந்திக்காத மேவெதர், மெக்கிரிகோரை வென்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.க்

By Devarajan

லாஸ்வேகாஸ்: குத்துச்சண்டை போட்டிகளில் தோல்வியை இதுவரை சந்திக்காத மேவெதர், இன்று மெக்கிரிகோரை வென்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அவருக்குப் பரிசாகக் கிடைத்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி, மலைப்பை ஏற்படுத்தியுள்ளன.

இன்று வென்ற போட்டியின் இறுதியில், வெற்றியாளர் மேவெதருக்கு கிடைத்தது பரிசுப்பணம் மட்டுமல்ல. 3,360 வைர கற்கள், 600 நீலமணி கற்கள், 1.5 கிலோ தங்கம் ஆகியவற்றால் ஆன பரிசு பெல்ட்டும் மேவெதருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பெல்ட் முதலையின் தோலில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக குத்துச்சண்டை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குத்துச்சண்டை ஜாம்பவான் ஃப்ளாய்ட் மேவெதர் மற்றும் யூஎஃப்ஸி நட்சத்திர வீரர் கானர் மெக்ரேகார் ஆகிய இருவரும் மரண மோதல் நிகழ்த்தினர்.

 50 போட்டிகளில்..

50 போட்டிகளில்..

10 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டி முடிவதற்கு 1:55 நிமிடங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில், ஃப்ளாய்ட் மேவெதர் வெற்றிபெற்று புதிய வரலாற்றுச் சாதனைப் படைத்தார். 50 போட்டிகளில் தோற்காமல் வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மேவெதர்.

 மேவெதர் வெற்றி

மேவெதர் வெற்றி

மேவெதர் விட்ட சரமாரி குத்துக்களால், மெக்ரேகார் முகம் முழுவதும் ரத்தம் கசிந்தது. அவரால் மேற்கொண்டு செயல்பட முடியாமல் தள்ளாடினார். போட்டி முடிய இன்னும் 1:55 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், ஆட்டத்தை முடிப்பதாக நடுவர் அறிவித்தார்.

 பரிசு பெல்ட்

பரிசு பெல்ட்

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் 1.5 கிலோ 24 காரட் தங்கம், 3,360 வைரக்கற்கள், 600 நீலக்கற்கள் மற்றும் 160 மரகதக்கற்களால் முதலைத் தோலில் வடிவமைக்கப்பட்ட பெல்ட் ஃப்ளாய்ட் மேவெதருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.

 மேவெதர் பாராட்டு

மேவெதர் பாராட்டு

இந்த சாதனை வெற்றி குறித்து ஃப்ளாய்ட் மேவெதர், " இதுவரை நான் சந்தித்த போட்டியாளர்களிலேயே மெக்கிரிகோர் மிகவும் சிறந்தவர். நான் நினைத்ததை விட அவர் சிறப்பாக விளையாடினார். புதுமையான பல யுத்திகளை பயன்படுத்தினார்.

 கடைசி போட்டி

கடைசி போட்டி

ஆனால் இறுதியில் நான் சிறந்தவன் என்பதை நிரூபித்துவிட்டேன். குத்துச்சண்டை ரசிகர்களுக்கு இந்தப் போட்டி நிச்சயம் சிறந்த விருந்தாக அமைந்திருக்கும். நான் முன்பு கூறியது போலவே எனது ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. எனது கடைசி போட்டி இத்தனை சிறப்பாக அமையும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, August 27, 2017, 13:48 [IST]
Other articles published on Aug 27, 2017
English summary
Mayweather got 3,360 diamonds, 600 sapphires, 1.5kg of solid 24 carat gold belt in Las Vegas.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X