For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

குழந்தைகளின் ஆபரேஷனுக்காக பரிசுத் தொகையை தானம் செய்த ஜெர்மனி வீரர், 'மெஸ்ஸி அன்ட் கோ'

By Siva

பியூனஸ் ஏர்ஸ்: ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் கிடைத்த பரிசுத் தொகையில் ரூ. 82 லட்சத்து 33 ஆயிரத்து 163 ரொக்கத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு அளித்துள்ளார்கள் அர்ஜென்டினா வீரர்கள்.

ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்றது.

இந்நிலையில் வீரர்கள் பரிசுத் தொகையை என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.

பரிசு

பரிசு

ஜெர்மனி அணிக்கு ரூ.210 கோடியும், அர்ஜென்டினா அணிக்கு ரூ.150 கோடியும் பரிசாக அளிக்கப்பட்டது.

மெசுட்

மெசுட்

ஜெர்மனி அணி வீரர் மெசுட் ஆசில்(25) தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் ரூ.2 கோடியே 40 லட்சத்து 63 ஆயிரத்து 546 நன்கொடையாக அளித்துள்ளார். இந்த பணத்தில் பிரேசிலைச் சேர்ந்த 23 குழந்தைகளின் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

அர்ஜென்டினா

அர்ஜென்டினா

அர்ஜென்டினா அணி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த பரிசுத் தொகையில் ரூ. 82 லட்சத்து 33 ஆயிரத்து 163 ரொக்கத்தை பியூனஸ் ஏர்ஸில் உள்ள குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க முடிவு செய்தனர்.

மெஸ்ஸி பவுன்டேஷன்

மெஸ்ஸி பவுன்டேஷன்

நன்கொடை அளிக்கும் ஐடியாவை அளித்தது அர்ஜென்டினா வீரர் சேவியர் மாஸெரானோ. இந்த பணம் மெஸ்ஸி நடத்தும் பவுன்டேஷன் மூலம் அந்த மருத்துவமனையிடம் அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 17, 2014, 17:23 [IST]
Other articles published on Jul 17, 2014
English summary
Though they lost the World Cup, the Argentina football players have proved that they are really winners. The team reportedly donated nearly £80,000 of their World Cup prize money to a Buenos Aires hospital.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X