For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஒரே நாளில் டாப்புக்கு போன சூப்பர் மச்சான்ஸ்

By Staff

சென்னை: ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வியடைந்த நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி. வென்றது.

ஐ.எஸ்.எல். எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் துவங்கியுள்ளது. 2015ல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி., அணி உள்பட 10 அணிகள் இந்தாண்டு பங்கேற்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல்' டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்.சி., அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் கோவாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

சென்னையின் எப்சி

சென்னையின் எப்சி

இந்த நிலையில், சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி வென்றது. இதில், ஒரு கோல் எதிரணி போட்டுத் தந்தது.

அட்டாங்கிங், டிபன்சில் கலக்கியது

அட்டாங்கிங், டிபன்சில் கலக்கியது

போட்டியின் துவக்கத்தில் இருந்தே சென்னையின் எப்சி அணி வேகமாக செயல்பட்டது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய அதே நேரத்தில், தடுப்பாட்டத்திலும் ஈடுபட்டதால், எதிரணி குழம்பியது.

சென்னைக்கு அபார வெற்றி

சென்னைக்கு அபார வெற்றி

இதைப் பயன்படுத்தி முதல் பாதியில் சென்னையின் எப்சி முதல் கோலை அடித்தது. குழப்பத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணி சேம்சைடு கோலடிக்க, முதல் பாதியில் 2-0 என சென்னையின் எப்சி முன்னிலைப் பெற்றது. சென்னையின் எப்சி தடுப்பாட்டத்தை உடைக்க முடியாமல் கோலடிக்க நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி திணறியது. இந்த நேரத்தில்இ ரண்டாவது பாதியில் மற்றொரு கோலை அடிக்க 3-0 என சென்னையின் எப்சி அபாரமாக வென்றது.

9வது இடத்தில் இருந்து முதலிடம்

9வது இடத்தில் இருந்து முதலிடம்

இதன் மூலம் புள்ளிப் பட்டியலில், 9வது இடத்தில் இருந்த சென்னையின் எப்சி, விர்ரென முன்னேறி, முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக டிசம்பர் 3ல் புனே அணியை சந்திக்க உள்ளது சென்னையின் எப்சி

Story first published: Friday, November 24, 2017, 18:04 [IST]
Other articles published on Nov 24, 2017
English summary
Chenniyin FC defeated NorthEast United FC
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X