பார்சிலோனா: லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி அல்வஸ் அணியை 4-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கிறிஸ்டானோ ரொனால்டோ அசத்தலாக ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். மற்றொரு வீரர் அல்வரோ ஒரு கோலை அடித்தார். மற்றொரு போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி மலகாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறியது.
இதேபோல் எப்சி பார்சிலோனா, கிராண்டா அணியை எதிர்கொண்டது. இதில் மெஸ்ஸி, லூயிஸ் சவாரஸ், நெய்மர் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் எப்சி பார்சிலோ அணி 1 கோலடித்து 3 புள்ளிகளைப் பெற்றது.
10- வது வார லா லிகா போட்டி முடிவுகள்:
லிகான்ஸ் 0-1 ரியல் சோசியடெட்
ஸ்போர்ட்டிங் 1-1 செவில்லா
அலவஸ் 1-4 ரியல் மாட்ரிட்
அட்லெட்டிகோ மாட்ரிட் 4-1 மலகா
எப்சி பார்சிலோனா 1-0 கிராண்டா