ஜப்பானுக்கு "ஆர்ஏசி"... பிரான்ஸ்க்கு சீட் கன்பர்ம்டு!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்த குவஹாத்தியில் நேற்று இரவு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வென்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ். தோல்வியடைந்தாலும் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஜப்பானுக்கு உள்ளது.

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இ பிரிவில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ஜப்பானும் பிரான்ஸும் மோதின.

France qualified

சம பலம் கொண்ட அணிகள் விளையாடும்போது, ஆட்டம் பரபரப்பாக இருக்கும். இந்த ஆட்டமும் அப்படியே அமைந்தது. பிரான்ஸின் மிக நீளமான பெயரைக் கொண்ட ஆர்சனல் டார்கெட் அமினி கவுரியி, 13வது நிமிடத்தில் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.

கடைசியில் 71வது நிமிடத்திலும் அவர் மற்றொரு கோலை அடிக்க, 2-0 என்று பிரான்ஸ் முன்னிலை பெற்றது. கடைசி கட்டத்தில் ஜப்பான் 73வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. டிரா செய்யும் ஜப்பானின் முய.ற்சி பலிக்கவில்லை.

அதையடுத்து 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்று, அடுத்தச் சுற்றுக்கு நுழைந்தது முன்னாள் சாம்பியனான பிரான்ஸ். இ பிரிவில் தான் விளையாடிய முதல் போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணியை ஜப்பான் வென்றது. அடுத்தப் போட்டியில் நியூ காலடோனியா அணியை ஜப்பான் சந்திக்கிறது.

இதுவரை இரண்டு போட்டிகளிலும் நியூ காலடோனியா தோல்வியடைந்துள்ளதால், அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கு ஜப்பானுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இ பிரிவில் நேற்று இரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான நியூ காலடோனியாவை வென்றது.

முதல் போட்டியில் ஜப்பானிடம் 6-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த ஹோண்டுராஸ், அடுத்த ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கிறது. அடுத்த சுற்றுக்கு நேரடியாக நுழைவதில் ஜப்பான், ஜோண்டுராஸ் இடையே போட்டி உள்ளது. ஆனால் ஜப்பானுக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

நேற்று இரவு நடந்த எப் பிரிவு ஆட்டத்தில் மெக்சிகோ அணியை, 3-2 என்ற கோல் கணக்கில் வென்று, இங்கிலாந்து அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் சிலியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஈராக் தக்க வைத்துள்ளது.

இன்று நடக்கும் ஆட்டங்களில் ஏ பிரிவில் இந்தியா -கானா மற்றும் அமெரிக்கா - கொலம்பியா அணிகள் மோதுகின்றன. பி பிரிவில் துருக்கி - பராகுவே, மாலி - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
France sailed through to the next round by beating Jappan in the FIFA U17 world cup
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற