பெட் கட்டித் தோற்ற மேயர்.. எலிக்கறி சாப்பிட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றினார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மான்ட் டி மார்சன்: கால்பந்துப் போட்டி சவாலில் தோற்ற மேயர் சொன்னப்படி எலிக்கறி சாப்பிட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள மோன்ட் டி மர்சான் நகர் மேயராக இருப்பவர் சாரலஸ் டயோட். கால்பந்து விளையாட்டு தீவிர ரசிகராவார்.

இவர் கால்பந்துப் போட்டிகள் நடக்கும்போது யார் வெற்றி பெறுவார்கள் என பந்தயத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பாரிஸ் ஜெயின் ஜெர்மைன் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் இடையே கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

 எலிக்கறி சாப்பிடுவதாக சவால்

எலிக்கறி சாப்பிடுவதாக சவால்

இப்போட்டியில் பந்தயம் கட்டிய மேயர் பாரீஸ் அணி தோல்வி அடைந்தால் எலிக்கறி சாப்பிடுவதாக சவால் விட்டார். விளையாட்டு போட்டி தொடங்கியதும் முதல் சுற்றில் பாரீஸ் அணி வெற்றி பெற்றது.

 சவாலில் தோற்ற மேயர்

சவாலில் தோற்ற மேயர்

ஆனால் இரண்டாவது சுற்றில் பாரீஸ் அணி படு தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து சவால் விட்டவாறு மேயர் எலி இறைச்சி சாப்பிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

 எலிக்கறி சாப்பிடாமல் ஜகா

எலிக்கறி சாப்பிடாமல் ஜகா

ஆனால் எலிக்கறி சாப்பிடாமல் பல நாட்களுக்காக மேயர் தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மேயர் எலிக்கறி சாப்பிடுவார் என அறிவிக்கப்பட்டது.

மக்கள் முன்னிலையில் எலிக்கறி

இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் மேஜையில் எலிக்கறி பரிமாறப்பட்டது. அதனை எந்தவித தயக்கமும் இன்றி மேயர் சாப்பிட்டார்.

எலிக்கறி ருசியாக இருந்தது

இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசிய மேயர் டயோட் கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன். எலிக்கறி முயல் கறியை போல் நன்றாக இருந்தது எனக் கூறினார். மேயராக இருந்துக்கொண்டு கொடுத்த வாக்கை காப்பாற்றிய மேயர் டயோட்டை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
French mayor eats rat after losing football bet. Dayot, who was elected mayor of Mont-de-Marsan in south-west France earlier in July.
Please Wait while comments are loading...